வட இந்திய (ஜெயின் சமூகத்தினர்) முதலீட்டார்கள் 92 பேர் கடந்த வெள்ளி, சனி .ஞாயிறுகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனா். அத்துடன் இவர்கள் தெற்கு ,காலி போன்ற பிரதேசங்களையும் பார்வையிட்டனர்
இலங்கைக்கு வருகை தந்த முதலீட்டுக்குழுவுக்கு தொழிலதிபர் ரமேஷ் தார்கர் தலைமை தாங்கியிருந்தார் இக்குழு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம, கல்விஇராஜாங்க அமைச்சர் அரவிந்தக்குமார், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் ஒன்று கூடினார்கள்.
முதலீட்டு சபை இலங்கையில் மேற்கொள்ளக் கூடிய சுகாதாரம், உயர்கல்வி, சுற்றுலாத்துறை, ஆடை உற்பத்தி , மற்றும் ்உற்பத்தித்துறையில் ஊக்குவிப்பு பணிப்பாளரினால் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் ஊக்குவிப்பு அமைச்சருக்கு வட இந்திய முதலீட்டாளர்கள் பொன்னாடை போற்றி கௌரவித்தனா். இலங்கை -இந்திய ஒருங்கினைப்பாளர் மாவை அசோகனும் இணைந்திருந்தார்.
0 comments :
Post a Comment