மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் வழங்குவதற்கான சமூக நலன்புரி திட்டத்திற்கான தரவுகள் online சேகரிப்பு ஆரம்பம்!



வி.ரி. சகாதேவராஜா-
ரசாங்கத்தின் புதிய திட்டமான சமூக நலன்புரி சேவை திட்டத்தின் கீழ் நாடெங்கிலும் உள்ள பிரதேச செயலக பிரிவுகளில் நிகழ்நிலை( online) மூலம் பயனாளிகளின் தரவுகள் சேமிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களில் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அந்த அடிப்படையில் திருக்கோவில் பிரதேசத்தில் விண்ணப்பிக்கப்பட்ட 7430 பயனாளிகளுக்கான தரவுகளைப் பெறுவதற்கான online வேலைத்திட்டம் நேற்று(10) வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரனின் தலைமையில் இந்த online நிகழ்ச்சி திட்டம் காஞ்சிரங்குடா கிராமத்தில் நேற்று
ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காஞ்சிரங்குடாவில் உள்ள 140 குடும்பங்களில் நேற்று 15 குடும்பங்கள் இந்த நிகழ்நிலை online தரவு சேகரிப்பிற்கு உள்ளானது.

பயனாளிகள் தொடர்பாக அநேக விடயங்கள் online சேகரிப்பில் உள்வாங்கப்படவிருப்பதால் இந்த வேலைத் திட்டம் சுமார் மூன்று மாதங்கள் இடம்பெறலாம் என்று உதவி பிரதேச செயலாளர் சதீஸ் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :