கிழக்கு பல்கலைக்கழக சமுகம் நடாத்தும் உரிமைப்போராட்டத்திற்காக இன்று (7) செவ்வாய்க்கிழமை காலை அம்பாறையிலிருந்து பெருந்திரளான
மக்கள் பயணித்தனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு கிளை தலைவர் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இப் பயணம் ஒழுங்கமைக்கப்பட்டது.
இன்று காரைதீவில் இருந்து மூன்று பஸ்களில் அம்பாறை மாவட்ட மக்கள் மட்டக்களப்பு நோக்கி பயணித்தார்கள். மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேஷ் தமிழரசுக் கட்சியின் சார்பில் ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பிரமுகர்களும் பயணித்தனர்.
அவரது அழைப்பில் "எமக்கான சுதந்திரத்தை நாம் இன்னும் அடையவில்லை , எமது பல்கலைக்கழக உறவுகளால் ஏற்பாடாயிருக்கும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வருமாறு அன்புடன் அழைக்கின்றேன். வாகன ஒழுங்கு காரைதீவு பாலையடி பிள்ளையார் கோயில் வீதி விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு முன்பு இருந்து புறப்படும் என்று அறிவித்தார்.

0 comments :
Post a Comment