நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏவிசன் கல்குடா அமைப்பினால் போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் இன ஐக்கியத்தை மேம்படுத்துவோம் எனும் தொனிப் பொருளில் மாபெரும் சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2023) ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் இடம் பெற்றது.
ஏவிசன் கல்குடா அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஏ.சதீக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் 06வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் லசந்த ரத்நாயக்க,வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர்.பண்டார, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன், பிரதேச செயலக பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், பிரதேச பாடசாலைகளின் அதிபரகள் சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் மும்மத தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதான வீதியில் இருந்து சதந்திர தின ஊர்வலம் பிரதேச கலை நிகழ்ச்சிகளுடன் பாலத்தடிக்கு வருகை தந்ததுடன் ஓட்டமாவடி ஆற்றில் நீச்சல் போட்டி, தோனி ஓட்டப் போட்டி, நீரீழ் மூழ்குபுவர்களை காப்பாற்றுதல், பிரதேச பாடசாலை மாணவர்களது கலை நிகழவுகள், போன்ற நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.
இதன் போது பிரதேசத்தின் மூத்த சுழியோடிகள், கொரோனா ஜனாஸா நல்லடக்கத்தில் ஈடுபட்டவர்கள், சமூக முன்னோடிகள் என பலரும் நினைவு சின்னம் வழங்கி ஏவிசன கல்குடா அமைப்பினால் கௌரவிக்கப்பட்டனர்
0 comments :
Post a Comment