பொகவந்தலாவ பெறுந்தோட்ட நிருவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கொட்டியாகலை மேல்பிரிவு தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களால் பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்தினை தோட்ட நிர்வாம் பொறுப்பேற்க மறுப்பு தெரிவித்தமையினால் பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்டபகுதியில் உள்ள மடுவங்களில் தேங்கி கிடப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம்
20.02.2023. திங்கள்கிழமை இடம் பெற்றுள்ளது.
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிருவனத்தின் ஊடாக டிஜிட்டல் தாராசு
அறிமுகபடுத்தப்பட்டு தேயிலை கொழுந்தினை அளவீடு செய்து வந்தபோதிலும் கடந்த வாரம் பொகவந்தலாவ பெருந்தோட்ட நிருவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ முகாமையாளர்களுக்கிடையில் கலந்துரையாடலை மேற்கொண்டபோது நீர்வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடாக இனிமேல்
டிஜிட்டல் தாராசு பயன்படுத்தபட மாட்டாது என உத்தியோக பூர்வமாக
அறிவித்தார்
இருந்தபோதிலும் இரண்டு நாட்கள் மாத்திரம் வழமையான தாரசினை பாவித்த பின் இன்றய தினத்தில் இருந்து மீண்டும் டிஜிட்டல் தாராசினை தேயிலை கொழுந்தினை அளவீடு செய்ய பயன்படுத்தியபோது தொழிலாளர்கள் டிஜிட்டல் தாராசினை வேண்டாமென கூறி எதிர்ப்பினை வெளிபடுத்தியமையால் தோட்ட நிர்வாகம் தேயிலை
கொழுந்தை பொருப்பேற்கவில்லையென தொழிலாளர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.
டிஜிட்டல் தாராசினை நீக்கும்வரை தாம் தொழிலாளுக்கு செல்லபோவதில்லையென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
0 comments :
Post a Comment