உகந்தையில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பூசத் திருவிழா !



வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை முருகன் ஆலயத்தில் நேற்று முன்தினம் (5) ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க. கு. சீதாராம் குருக்கள் தலைமையில் உதவிக்குருமார்களான சிவஸ்ரீ ஆ. கோபிநாத சர்மா மற்றும் சிவஸ்ரீ சி.கு. கோவர்த்தன சர்மா ஆகியோரின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற தைப்பூசத் திருவிழாவில்காலை 10 மணியளவில் உகந்த மலையில் இருக்கின்ற வள்ளியம்மன் ஆலயத்திலிருந்து பாற்குடபவனி இடம் பெற்றது.

மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை ஓய்வு நிலை அதிபர் வேலாப் போடி இலட்சுமிசுந்தரம் அவர்களின் உபயத்தில் தைப்பூச திருவிழா வழமைபோல இம்முறையும் இடம் பெற்றது என்று ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க தெரிவித்தார் .

பாற்குடபவனிக்கான பாலை இலவசமாக தம்பிலுவிலைச் சேர்ந்த ரமேஷ்குமார் ஜனாதினி தம்பதிகள் வழங்கினர்.

காலையில் பாற்கூடபவனியை தொடர்ந்து அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை இடம்பெற்றது. மாலையில் திருவிளக்குப்பூஜை வசந்த மண்டப அலங்கார பூஜை சுவாமிகள் உள்வீதி உலா வருதல் என்பன இடம்பெற்றன.
பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :