அவுஸ்திரேலிய அன்பாலய அனுசரணையில் திராய்க்கேணி மக்களுக்கு உலருணவு



காரைதீவு சகா-
ல்முனை றொட்டரிக் கழகம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திராய்கேணி கிராமத்தில் வசிக்கின்ற வறிய மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் 30 குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் 5000/- பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.

இதற்கான நிதியை அன்பாலயம், அவுஸரேலியாவின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தில்லையம்பலம் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.

கல்முனை ரோட்டரி கழக தலைவர் ரோட்டேரியன் விஜயரத்தினம் விஜயசாந்தன் தலைமையிலான ரோட்டரி உறுப்பினர்கள் அங்கு சென்று அதனை வழங்கி வைத்தனர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி,பருப்பு,கோதுமை மா,சீனி,சோயா என்பன உட்பட்ட 20 கி.கி நிறையுடைய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கழக பொருளாளர் றோட்டரியன் எம்.சிவபாதசுந்தரம் றோட்டரியன் நாசர் உள்ளிட்ட நான்கு அங்கத்தவர்களுடன், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :