சம்மாந்துறை பிரதேசத்தில் யானைகளினால் ஏற்படும் பாதிப்பை குறைப்பது சம்மந்தமாக கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஏ. டக்ளஸ் அவர்களது தலைமையில் இன்று(24) இடம் பெற்றது.
இக் கலந்துரையாடலில் வனவிலங்கு பாதுகாப்பு துறைக்கான உதவி பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் அனர்த்த முகமைத்துவ உதவி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போது சம்மாந்துறையில் யானைகளால் விவாசயிகளுக்கு இடம்பெறும் தாக்குதல் மற்றும் வயல்கள் நஸ்டமடைவதை தவிர்ப்பதற்காக இக் கலந்துரையாடலில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
வனவிலங்கு பாதுகாப்பு செயலணியும் சிவில் பாதுகாப்பு படையும் இணைந்து பாதுகாப்பை வயல் நிலப் பகுதிகளில் உறுதிப்படுத்துவதோடு குறித்த தனி யானையை இனங்கண்டு அதனை வனவிலங்கு சரணாலயத்திற்கு ஏற்றி செல்லுதல் மற்றும் நீண்டகால பாதுகாப்பு திட்டத்தை தீர்மானித்து நடைமுறைபடுத்துவதற்கு தேவையான தரவுகளை சேகரித்து நடவடிக்கை எடுத்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment