சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக, உதவி முகாமையாளராக கடமையாற்றிய ஊடகவியலாளர் றியாத் ஏ. மஜீத் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்று தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவ பணிப்பாளர் ஏ எல்.யூ. ஜூனைதாவின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் நேற்று (27) சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளரும், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஸ்தாபக பிரதேச செயலாளருமான ஏ.மன்சூர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிக்கா, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ. பாவா, கணக்காளர் நுஸ்ரத் பானு, திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ. ஹமீட், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நழிர், கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், நிந்தவூர் பிரதேச செயலக தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.அன்வர், கருத்திட்ட முகாமையாளர் யூ.எல்.ரஹ்மதுல்லாஹ், வங்கி முகாமையாளர் ஏ.எம்.இக்ராம், சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர்களான எம்.எஸ்.எம். மனாஸ், ஏ.ஆர்.எம். பர்ஹான், நாவிதன்வெளி பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர் எம்.எம்.முபீன், உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிலோன் மீடியா போரத்தின் நிர்வாகத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்ற றியாத் ஏ. மஜீத் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு, சாய்ந்தமருது சிற்றி கேக் நிறுவனம் அன்பளிப்பாக வழங்கிய கேக்கினை வெட்டி தனது கடமைகளை ஆரம்பித்து வைத்தார்.
பதவியுயர்வு பெற்ற றியாத் ஏ. மஜீத் தனது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாசனைத் திரவியம் (அத்தர்) ஒன்றினை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
இதில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்ற றியாத் ஏ. மஜீத்தினை அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மன்றத்தின் வட - கிழக்கு இணைப்பாளரும் சாய்ந்தமருது பிரதேச செயலக மன்றத்தின் தலைவரும், சமூக அபிவிருத்தி உதவியாளருமான யூ.எல்.ஜஃபர் மற்றும் ஓய்வுபெற்ற சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.கபூர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவித்ததுடன் சமுர்த்தி வங்கிச் சங்க உத்தியோகத்தர்களால் அன்பளிப்பு வழங்கி வைக்கப்பட்டது.
றியாத் ஏ. மஜீத் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக 1996.03.04 ஆம் திகதி கல்முனை பிரதேச செயலகத்தில் முதல் நியமனம் பெற்று சாய்ந்தமருது - 14 ஆம் பிரிவில் 3 வருடங்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றினார். பின்னர் சாய்ந்தமருது உப பிரதேச செயலகம் 1999 ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டதனால் அதில் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி வங்கிச் சேவை 2001 ஆம் ஆண்டு சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்ட போது அதில் ஸ்தாபக உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டு சுமார் 16 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
அவரது காலப்பகுதியில் சமுர்த்தி வங்கி பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது.
பின்னர் சாய்ந்தமருது சமுர்த்தி வலயத்தின் உதவி முகாமையாளராக 5 வருடங்கள் சிறப்பாக கடமையாற்றியுள்ள இவர், அதனை தொடர்ந்து சாய்ந்தமருது சமுர்த்தி மகா சங்கத்தின் உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டு 7 மாதங்கள் கடமையாற்றிய நிலையில், தனது பட்டப் படிப்பை நிறைவு செய்ததன் மூலம் இன்று சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
இவர் சிலோன் மீடியா போரம் ஊடக அமைப்பின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment