காஷ்மீர் நட்புறவு தினம்” அனுஷ்டிப்பு



அஷ்ரப் ஏ சமத்-
காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தானின் நிபந்தனையற்ற ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், "காஷ்மீர் நட்புறவு தினத்தை" முன்னிட்டு கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி ஒன்றை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் திங்கற்கிழமை (06) ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விழாவில், பல வெளிநாட்டு தூதுவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாகிஸ்தான் சமூகத்தினர், காஷ்மீர் நலன்விரும்பிகள் மற்றும் இலங்கையின் ஊடக பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

பாகிஸ்தான் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அவர்களின் காஷ்மீர் நட்புறவு தின செய்திகள், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் வர்த்தக இணைப்பாளர் மற்றும் ஊடக இணைப்பாளர் அவர்களால் முறையே வாசிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முக்கிய பேச்சாளர்களாக திரு. ஷிராஸ் யூனாஸ், பொருளாதார அபிவிருத்தி ஆலோசனைக் குழுவின் சபை உறுப்பினர் மற்றும் திருமதி சூரியா ரிஸ்வி, செயலாளர் இளம் முஸ்லிம் பெண்கள் சங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். பயனுள்ள உரையாடல் மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வினை வலியுறுத்திய அனைத்து பேச்சாளர்களும் சமய நல்லிணக்கம் மற்றும் அனைவரினதும் அமைதியான சகவாழ்வின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர். மேலும், இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில் இந்தியப் படைகள் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் ஃபாரூக் பர்கி

அங்கு உரையாற்றும்போது

, காஷ்மீர் சகோதர, சகோதரிகளிகளுடன் தோளோடு தோள் நின்று எப்போதும் துணை நிற்போம் பாகிஸ்தான் அரசு மற்றும் மக்களின் உறுதிப்பாட்டினை வலியுறுத்தினார். இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய துருப்புக்களின் கொடூரமான வன்முறைக்கு உட்படுத்தியுள்ளது.

என்றும், இந்த மனித உரிமை மீறல்களை உலக நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை கவனத்தில் கொள்ள வேண்டிய காலம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

" ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரச்சனைகளை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் தீர்க்கப்படல் வேண்டும், பாதுகாப்பு கவுன்சில் அதன் சொந்த தீர்மானங்களை செயல்படுத்தி காஸ்மீர் மக்களுக்கு இழைக்கும் பேரழிவினை தடுத்தல் வேண்டும். இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் இந்திய அரசின் மிருகத்தனமான செயல்களால் காஷ்மீரில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையானது, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது " என்றும் உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டினாா்

இவ் வைபவத்தில் இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில், இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் மனித உரிமை மீறல்களை சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதோடு, இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரின் அழகிய பிரதேசங்கள் மற்றும் இந்திய படைகளின் வன்முறையை வெளிப்படுத்தும் டிஜிட்டல் வீடியோக்களும் இந்நிகழ்வின் போது காண்பிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :