கல்முனை அல் /மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்களுக்கான நியமனம் வழங்குதல் மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வும்,2022 ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரஸாக் அவர்களின் தலைமையில் இன்று(27) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பி.நஸ்மியா சனூஸ்,கௌரவ அதிதியாக சம்பத் வங்கி நிந்தவூர் கிளை முகாமையாளர் எம்.கே.முஸம்மில் ஹுஸைன் கலந்து சிறப்பித்ததுடன் பாடசாலையின் பிரதி அதிபர் ஐ.எல்.எம். ஜின்னாஹ்,ஒழுக்காற்று சபை உறுப்பினர்கள்,பகுதித்தலைவர்கள்,ஆசிரியர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment