75 ஆவது சுதந்திர தின வைபவத்தின் திருமலை மாவட்ட பிரதான நிகழ்வு திருமலை மாவட்ட செயலகத்தில்



ஹஸ்பர்-
பிமானம்மிக்க தேசமொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் உதித்துள்ளதாகவும் இன்னொருவரின் மீது கைகளை நீட்டி குறைகாண்பதை விடுத்து முதலில் தன்னுள் மாற்றங்களை ஏற்படுத்தி நாட்டு நலனுக்காக செயற்பட திடசங்கற்பம் பூணுமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான கபில நுவன் அத்துகோரல தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை மற்றும் திருகோணமலை மாவட்ட செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த தாய்நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளின் மாவட்ட பிரதான நிகழ்வு இன்று(04) மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எமக்கு பின்னர் சுதந்திரம் பெற்ற நாடுகள் இன்று எம்மைவிட அனைத்தம்சங்களிலும் முந்திச்சென்றுள்ளன. காலணித்துவ வாதிகள் விட்டுச்சென்ற எச்சங்கள் இன்றும் எம்மத்தியில் காணப்படுகின்றது. சவால்களை முறியடித்து நாட்டை உலகின் வலுவான தேசமாக மாற்றியமைக்கும் வகையில் திட்டங்களை வகுத்து செயற்படல் வேண்டும். தமக்குரிய தனிப்பட்ட பொறுப்புக்கள், சமூகத்திற்கு செய்ய வேண்டிய பொறுப்புக்கள் மற்றும் நிறுவனம் என்றடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை உணர்ந்து அர்ப்பணிப்பான சேவையை வழங்குவதன் ஊடே நெருக்கடி நிலையில் உள்ள எமது தாய்நாட்டை அதிலிருந்து விடுபடச்செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அன்று சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக சிங்கள, தமிழ்த்தலைவர்கள் எவ்வித வேறுபாடின்றி நாட்டை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள். எமது நாட்பாடில் நீர்ப்பாசன திட்டங்கள் முன்னரே ஏற்படுத்தப்பட்டன. அவை நாட்டின் அபிவிருத்தியை நோக்காக கொண்டு அன்றைய மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டன.அப்படியான நிர்மாணிப்புக்களை அன்று செய்யுமளவில் மொழிநுட்ப அறிவை கொண்ட நமது நாடு இன்று பொருளாதார ரீதியாக பல இடர்களை முகங்கொடுக்கின்றது. இச்சவால்களை முறியடித்து நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு செல்வதென்பது கடினமான விடயமல்ல. சுதந்திரத்தின் பின்னரும் நாம் அப்பயணத்திலேயே இன்னும் இருக்கின்றோம். குறித்த பயணத்தை முடிப்பதற்கு எவ்வளவு காலம் செல்லுமென்பது எம்கைகளிலேயே தங்கியுள்ளது . எனவே ஒரு கணப்பொழுதும் தாமதப்படுத்தாது முன்னோக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்தல் வேண்டும். இலங்கை எமது தேசமாகும். எமது தாய்நாடாகும். தாய்நாட்டை நாம் பாதுகாத்தல் வேண்டும்.தாய்நாட்டை சுகப்படுத்த வேண்டும். இச்சுதந்திரம் எம்முடையது. எங்களுக்கு மட்டும் உரியது. அதனை கொண்டாடுவது எமது உரிமையாகும் என மாவட்ட அரசாங்க அதிபர் பி. எச். என். ஜயவிக்ரம தெரிவித்தார்.

நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல பொருத்தமான திட்டங்களை நிறுவன ரீதியாக, சமூக ரீதியாக தயாரித்து செயற்படல் வேண்டும். கொள்கை சீர்திருத்தங்களை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அது எம்மனைவரது பொறுப்பாகும். நல்லிணக்கம் , தேசிய ஒருமைப்பாடு , சகவாழ்வை மேலும் வலுப்படுத்த வேண்டும். எதிர்கால பரம்பரைக்கு இவ்விடயங்கள் கொண்டு செல்லப்படல் வேண்டும்.அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கை விருத்தி செய்து நாட்டின் விருத்திக்கு பங்களிப்பவர்களாக நாம் அனைவரும் மாற வேண்டும் என இதன்போது கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர். எம். பி. எஸ். ரத்னாயக்க தெரிவித்தார்.
பொது நிருவாக அமைச்சின் அறிவுரையின் பேரில் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட சிறந்த கிராமிய பொருளாதார மறுசீரமைப்பு மற்றும்உணவுப்பாதுகாப்பு குழு தெரிவில் முதலாம் இடத்தை தம்பலகாமம் பாலம்பட்டாறு கிராம உத்தியோகத்தர் குழுவும், சிறந்த சிரமதான வேலைத்திட்டத்திற்கான தெரிவில் கந்தளாய் 227 எப் சூரியபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு வேலைத்திட்டமும், சிறந்த வீட்டுத்தோட்ட தெரிவில் பதவிசிறீபுரவை சேர்ந்த எச்.ஜி.குமாரதாசவும் சிறந்த மர நடுகை வேலைத்திட்டத்திற்கான தெரிவில் தம்பலகாமம் பொலிஸ் நிலையமும் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மூவினங்களை சேர்ந்த மாணவிகளின் கலை, கலாசார அம்சங்களும் இதன்போது அரங்கேறின. மாவட்ட செயலக வளாகத்தில் மர நடுகை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பெளத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதங்களின் மத தலைவர்கள், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட கிளைத்தலைவர்கள், ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :