இந்நிகழ்வுக்கு அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ.மலிக், அல் ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல்.நசார், மழ்ஹருஸ் சம்ஸ் மகா வித்தியாலய அதிபர் எம்.சி.என்.றிப்கா அன்ஸார், லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலய அதிபர் ஏ.ஐ.சம்சுதீன், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ.ஹிபதுள் கரீம், சாய்ந்தமருது உலமா சபையின் தலைவர் அஷ் செய்க் சலீம் (ஷர்கி) அம்பாறை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்தின் தலைவர் யூ.எல்.றிபாஉத்தின் (காஸிபி) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அல் ஹிலால் அஹதிய்யா பாடசாலை, அஸ் சபீனா அஹதிய்யா பாடசாலை மற்றும் தாறுல் குர்ஆனியா அஹதிய்யா பாடசாலைகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் அதிதிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.
நிகழ்வில் அஹதிய்யா பாடசாலைகளின் உயர்மட்ட அதிகாரிகள் சாய்ந்தமருது கலாச்சார
உத்தியோகத்தர் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தற்கால மாணவ மாணவிகளில் பலர் மார்க்கக் கல்வியை சீராக கற்று அதன்படி நடந்து கொள்ளாததன் காரணமாக பல்வேறு வேண்டப்படாத சிக்கல்களுக்குள் சிக்கித்தவிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
தற்கால மாணவ மாணவிகளில் பலர் மார்க்கக் கல்வியை சீராக கற்று அதன்படி நடந்து கொள்ளாததன் காரணமாக பல்வேறு வேண்டப்படாத சிக்கல்களுக்குள் சிக்கித்தவிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment