அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட 14 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் இரண்டாவது தடவையாகவும் தொடர்ச்சியான முறையில் கிண்ணியா மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது.
அகில இலங்கை பாடசாலை சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நடாத்திய குறித்த உதைப் பந்தாட்டப் போட்டியின் இறுதி போட்டி தம்புள்ளை விளையாட்டு மைதானத்தில் (24) இடம் பெற்றது. இதில் கண்டி விக்ரமபாகு மற்றும் கிண்ணியா மத்திய கல்லூரி அணியினர் ஒன்றையொன்று எதிர்த்தாடினர் 2:0 என்ற அடிப்படையில் கிண்ணியா மத்திய கல்லூரி அணியினர் சம்பியனாக முடிசூடினர்.
மொத்தமாக 24 பாடசாலை அணிகள் பங்குபற்றியதில் இறுதி சுற்றுக்கு கிண்ணியா மத்திய கல்லூரி அணி தெரிவாகியது இதில் வரலாற்று ரீதியாக அனைத்து போட்டிகளிலும் மொத்தமாக 21 கோல்களை பெற்ற பெருமையையும் இக் கல்லூரி பெற்று சாதனை படைத்துள்ளது. 2020இலும் சம்பியனாகி தொடர்ச்சியாக 2022 இலும் சம்பியனாக முடி சூடியுள்ளது.இதனால் இம் மாணவ வீரர்களை பயிற்சியில் திறம்பட ஈடுபடுத்திய விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு பெற்றார்கள் உட்பட பாடசாலை சமூகமும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
0 comments :
Post a Comment