இந்தோணிசியாவிலிருந்து அம்மான் எக்ஸஸ்சைஸ் கடற்படை கப்பல் 138 பேர் கொண்ட அணி அண்மையில் கொழும்புத் துறைமுகத்தினை வந்தடைந்தது.
இந் நிகழ்வில் இலங்கைக்கான இந்தோணிசியாத் துாதுவா் தேவி டொப்பிங் இப் படையின் அதிகாரிகளை துறைமுகத்திலிருந்து வரவேற்றார் அத்துடன் இலங்கையில் உள்ள மகளிா் கடற்படை அதிகாரிகளும் இணைந்து கொழும்பில் உள்ள இந்தோணிசியத் துாதகரத்தின் அலுவலகக் கேட்போா் கூடத்தில் ஒன்றுகூடலும் இடம் பெற்றது. இந் நிகழ்வின்போது இலங்கை மகளிா் கடற்படை அணியினரும், இந்தோணிசியா கடற்படை அணியிரும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனா்.
இந்தோணிசியா கடற்படைக் கப்பலில் 14 பெண் கெலிக்கெப்டர் விமானிகளும் கெலி விமானம் ஒன்றையும் எடுத்துவந்திருந்தனா். அதன் அனுபவங்களைக் இலங்கையின் கடற்படை மகளிா் அனியுடன் பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஜக்கிய நாடுகள் சமாதான படைகளில் இந்தோணிசியாவின் 2800க்கும் மேற்பட்ட மகளிா் படையினர் யுத்தம் நடைபெறும் ஆபிரிக்கா, சிரியா ,மாலி போன்ற பல்வேறு நாடுகளில் சமாதான படைகளாக சேவையாற்றி வருவதையும் இந்தோனிசியாத் துாதுவா் தெரிவித்தார்
0 comments :
Post a Comment