சப்போசிட்டரி (SUPPOSITORY) என்றால் என்ன? விசேட குழந்தை நல மருத்துவ நிபுணர் விஜி



வி.ரி.சகாதேவராஜா-
ப்போசிட்டரி (suppository) பற்றிய சரியான புரிதல் இன்மை அல்லது தயக்கம் எம்மவர் மத்தியில் காணப்படுகிறது. சப்போசிட்டரி மலவாயின் உள் வைக்கும் மருந்தின் வகையாகும் .

இவ்வாறு கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல மருத்துவ நிபுணருமான வைத்திய கலாநிதி டாக்டர் விஜி திருக்குமார் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

எவ்வாறு வாயினால் எடுக்கும் மருந்துகளை மாத்திரைகள்(Tablet), பாணி(Syrup) என்று அழைக்கறோமோ அதே போன்றுதான் சப்போசிட்டரியும். இதனை எடுக்கும் வழி மலவாயில் மாத்திரமே. இதனை எடுப்பதனால் மருந்தின் பயன்பாடு ஒன்றேயாகும். மாறாக இதனை பயன்படுத்துதலால் பாரிய விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற தேவையற்ற ஐயம் கொள்ளவேண்டியதில்லை.

1. இதனை இலகுவாக உள் வைப்பதன் ஊடாக அவற்றின் பயனை இலகுவில் பெற்றுக்கொள்ளலாம்
உதாரணமாக வாந்தியின் போது மாத்திரைகள் எடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றோம். அவ்வேளையில் இலகுவாக இதனை பயன்படுத்தலாம்.

2. அத்துடன் இவற்றின் அகத்துறிஞ்சும் வீதம் அதிகம்.
கடுமையான வாந்தியின் போது இலகுவாக பயன்படுத்தலாம்.
கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலிகளின் போது இலகுவாக பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

பிள்ளைகளில் பொதுவாக பயன்படுத்தும் சப்போசிட்டரிகளாவ

1. காய்ச்சல் மற்றும் நோ - பரசிடமோல் சப்போசிட்டரி(Paracetamol suppository),
2. நோ - டைக்குளோபனிக் சப்போசிட்டரி(Diclofenac sodium suppository).
3. வாந்தி - டொம்பரிடோன் சப்போசிட்டரி (Domperidone suppository).
4. மலச்சிக்கல் - டல்கோலக்ஸ் சப்போசிட்டரி (Dulcolax suppository).

வைத்தியரை அணுகின்ற வேளையில் தேவையறிந்து பிள்ளையின் நிறைக்கு ஏற்ப சப்போசிட்டரிகளை வழங்குவார்கள். இதன் மூலமாக பயன்களை எளிதில் பெற்றுக்கொள்வதுடன் தேவையற்ற சிரமங்களையும் தவிர்த்துக்கொள்ளலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :