தேசிய ரீதியில் இது தொடர்பான மிக முக்கியமான கலந்துரையாடல் ஒன்றினை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ,ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) நடாத்தியிருந்தது. இக்கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளர் அப்துர் ரஹ்மான், தேசிய அமைப்பாளர் பி எம் முஜிபுர் றஹ்மான், தலைமைத்துவ சபை உறுப்பினர் எம்.ஜே.எம். மன்சூர் (முன்னாள் அதிபர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பலகட்ட முக்கிய கலந்துரையாடல்கள் தற்போது NFGG உறுப்பினர்கள் மத்தியில் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக நேற்றைய தினம் காத்தான்குடி தலைமைத்துவ சபை உறுப்பினர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்றும் அதனைத் தொடர்ந்து தேசிய மட்டத்திலான தலைமைத்துவ சபையினருக்கிடையிலான Zoom தொழில்நுட்பம் வாயிலான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல்களின் போது பல முக்கியமான விடயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளதுடன் , சாதகமான பல தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் NFGG பல தரப்பினர்களுடனும் பரிசீலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment