கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக பொறியியலாளர் யூ.எல்.ஏ.நஸார் பொறுப்பேற்றார்.


நூருள் ஹுதா உமர்-
கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக ஆளுனரினால் நியமிக்கப்பட்ட பொறியியலாளர் உதுமாலெவ்வை அஹமட் நஸார் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகத்தில் தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக கடமையாற்றிய இவர் இலங்கை பொறியியலாளர் சேவை வகுப்பு- I ( SLES - I ) ஐச் சேர்ந்த நீர்ப்பாசனத்துறையில் 25 வருடங்களுக்கு மேலான சேவை அனுபவத்தை பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார் . நீர்ப்பாசனப் பொறியியலாளராக , பிரதம நீர்ப்பாசன பொறியியலாளராக மற்றும் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளராக கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வரும் பொறியியலாளர் யூ.எல்.எ.நஸார் உலக வங்கியின் உதவியுடன் ( World Bank ) செயற்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கு நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் சிரேஷ்ட பொறியியலாளராகவும் கடமையாற்றறியவர்.

இவர் பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களின் இயக்குதல், பராமரிப்பு, நீர்மாணம், புனரமைப்பு . வடிவமைப்பு மற்றும் செயற்படுத்துதல் போன்றவாறான விடயங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் என்பதுடன் பாரிய நீர்ப்பாசனக் குளமான தீருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு நீர்ப்பாசனக் குளத்தின் நீர்க்கொள்ளளவினை அதிகரிக்கும் வடிவமைப்புக்குப் பொறுப்பாக இருந்து அதனைச் செவ்வனே செயற்படுத்தியவர் . நீர்க்கொள்ளளவு அதிகரிக்கப்பட்டமை காரணமாக பயிர் செய்யும் காணிகளின் அளவு அதிகரிக்கப்பட்டமை இங்கு விசேடமாக குறிப்பிடத்தக்கது .

மேலும் பல பாரிய அணைக்கட்டு, வான், துருசு , Anicut பிரதான மற்றும் கிளை வாய்க்கால் நிர்மாணங்களுக்குத் தேவையான வடிவமைப்புக்களை ( designs ) செய்து வெளிநாட்டு மற்றும் இலங்கை அரசின் நிதியுதவிகளினால் செயற்படுத்தப்பட்ட பல திட்டங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளராக கடமையாற்றியவர் . தற்போது உலக வங்கியின் உதவியுடன் பொத்துவில் மற்றும் லகுகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள சிறு குளங்கள் புனரமைக்கப்படுகின்றமைக்கும் பொறுப்பாக உள்ளவர் என்பதுடன் அக்குளங்களின் நீர்க்கொள்ளளவு அதிகரிப்படுவது காரணமாக அதிகரித்த பயிர்ச்செய்கை , அதிகரித்த உற்பத்தி என்பன தற்போதைய தேவையான உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாய் அமைகின்றது .

கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ( தேசிய பாடசாலை ) கல்விகற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் விஞ்ஞானமானிப்பட்டத்தை சிவில் துறையில் பெற்றவர் என்பதுடன் நிர்மாண முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பினை மேற்கொண்டவராவார் . மேலும் இலங்கை பொறியியல் நிறுவனத்தின் அங்கத்தவரான இவர் பட்டயப் பொறியியலாளரும் ஆவார் . சீரமம் பாராத அயராத கடமையினால் விவசாயிகளின் அன்பினைப் பெற்ற பொறியியலாளர் யூ.எல்.எ.நஸார் அவர்களின் கிழக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் நியமனம் விவசாயிகளின் அதிகரித்த விவசாய செய்கை , அதனோடான அதிகரித்த உற்பத்தி என்பவற்றுக்கு உறுதுணையாக அமையும் என்பது திண்ணம் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :