ஜக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் முருகையா ரவிந்திரன் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த கைது சம்பவமானது 13.01.2023. வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணியளவில் கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
இம் மாதம் 11ம் திகதி புதன்கிழமை டிக்கோயா புளியாவத்தை நகரப்பகுதியில்
அனுமதி பத்திரம் பெறாது வரத்தக நிலையம் ஒன்றில் கோழி இறைச்சி விற்பனை செய்து வந்த நபருக்கு எதிராக நடவடிக்கையினை மேற்கொள்ள நோர்வூட் பிரதேசசபையின் செயலாளர் மற்றும் நோர்வூட் பிரதேசசபையின் உத்தியோகதத்ர்கள் சென்று இருந்த போது அவர்களின் சேவைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் முன்னாள் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் முருகையா ரவீந்திரன் கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
0 comments :
Post a Comment