அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நுாற்றாண்டு விழா எதிா்வரும் 19ஆம் திகதி உலமா சபைத் தலைவா் மௌலவி அஷ்ஷேக் எம்.ஜ.றிஸ்வி முப்தியின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகின்றது. இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் . பிரதம பேச்சளராக தென் ஆபிரிக்க உலமா சபை தலைவா் மௌலானா இப்றாஹீம் பாஹ்ம் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனா்.நுாற்றாண்டை முன்னிட்டு விசேட முத்திரை வெளியிடப்பட இருப்பதோடு முதல் முத்திரையை ஜனாதிபதி வெளியீட்டு வைப்பாா்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் சன்மார்க்கத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடந்த 1924 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓர் உயர்ந்த சிவில் அமைப்பாகும். 2000 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தில் ஜம்இய்யா கூட்டிணைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 24 மாவட்டங்களிலும் பிரதேசக் கிளைகள் என 164 கிளைகள் உள்ளன.8000 க்கும் மேற்பட்ட ஆலிம்கள் தற்போது ஜம்இய்யாவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஜம்இய்யதுல் உலமாவின் கீழ் இயங்கும் கல்விப்பிரிவு, சமூக சேவைப் பிரிவு மற்றும் பத்வா பிரிவு போன்ற பல்வேறுபட்ட உப பிரிவுகள் மூலம் முஸ்லிம் சமூகம் எண்ணிலடங்காத சேவைகளை செய்து வருகின்றது. ஜம்இய்யாவின் தேசிய அளவிலான சமூக வேலைத்திட்டங்கள் மூலம் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் உட்பட முஸ்லிமல்லாதவர்களும் பயனடைந்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் ஐக்கியத்தையும் முஸ்லிமும் , முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியில் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் முயற்சியில் ஜம்இய்யா இந்த நாட்டில் செய்து வருகின்றது. இவ் அமைப்பு சுயதீனமாக இயங்கும் ஒர் அமைப்பாகும். கட்சி, அரசியல் இன,மத பிரதேச வேறுபாடின்றி ஆண்மீகத்துறையில் தனது செயற்பாட்டினை செயற்படுத்தி வருகின்றது.
இந்த நாட்டிற்கும் அவ்வப்போது பதவியிலிருந்த தலைமைகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல், போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டபோது நாட்டின் சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜெனிவா வரை சென்று நாட்டின் அரசாங்கத்துக்கு சார்பாக பேசுவது முதற்கொண்டு இலங்கையில் செயற்பட்டு வந்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய இயக்கங்களையும் ஜமாஅத்களையும் ஒரே குடையின் கீழ் இணைத்து அவர்களை வழிநடாத்துகின்ற பொறுப்பை ஜம்இய்யா தன்னகத்தே கொண்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இலங்கை முஸ்லிம்களை சன்மார்க்க ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சில இக்கட்டான நிலைகளில் அரசியல் ரீதியாகவும் வழிநடத்தி வந்துள்ளது. நாட்டில் அவ்வப்போது ஏற்படும் அனர்த்தம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளின்போது முஸ்லிம், முஸ்லிமல்லாதவர் என்று பாராது களத்தில் நின்று தன்னாலான நிவாரணம் மற்றும் மீள் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது. அந்தவகையில் 2005 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது ஜம்இய்யா மேற்கொண்ட நிவாரணப் பணிகளை உடன் வழங்கி வருகின்றது.
ஜம்இய்யதுல் உலமா சபை தனக்கு கீழியங்கும் உபபிரிவுகளில் ஒன்றான கல்விப் பிரிவின் மூலமாக தலைநகர் மற்றும் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் கல்விப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி வந்துள்ளதோடு அதற்கான நடைமுறைத் தீர்வுகளையும் உரிய தரப்புக்களோடு இணைந்து பெற்றுக் கொடுத்துள்ளது. தவிர மாணவ மாணவிகளுக்கான புலமைப் பரிசில்களையும் வழங்கி வருகிறது. கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட சுனாமி , வெள்ள அனா்த்தங்கள் போன்ற பல்வேறு சா்ந்தர்பங்களில் நாட்டின் நாலா பாகத்திற்கும் மனிதபிமான முறையில் அடிப்படைத்தேவைகளை செய்துள்ளது.
குறிப்பாக, இலங்கை ஈஸ்டர்தின குண்டுத் தாக்குதலின் பின்னர் பேரினவாத சக்திகளால் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் சமய, சமூக, பொருளாதார நெருக்கடியின் போது அதற்குரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதில் முஸ்லிம் அரசியல் தலைவர்களுடனும் பிறமத அரசியல் தலைவர்களுடனும் கூட்டிணைந்து இனங்களுக்கிடையிலான கொதிநிலையை கட்டுப்படுத்துவதில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்திரமான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜம்இயாவின் தலைவராக பதவி வகிக்கும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அதன் தலைமைப் பொறுப்பை பொறுப்பெடுத்து செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்..
அகில இலங்கை இஸ்லாமிய சமுகத்தில் நிகழும் அவ்வப்போது சமூக ,சமய தலைமை வழங்கும் இஸ்லாமிய இறையில் என்ற உச்ச மத அமைப்பு கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட பல விடயங்களில் தலைமை தாங்கி வருகின்றது. எமது நாட்டின் அண்மைக் காலமாக சில நிகழ்வுகளைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தை முழுக்க முழுக்க கட்டுக்கோட்பாட்டுக்குள் வழிநடத்த முடியாவிட்டாலும் ஆண்மீக ரீதியான விடயங்களை பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடி, தீர்மாணங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த அடிப்படையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இலங்கை முஸ்லிம்களுக்கு மாா்க்க ரீதியில் வழிகாட்டல்களையும் நிலைப்பாடுகளையும் அவற்றிக்கான வரையரைகளையும் விரிவாக வழங்குகின்றது. இப்பணியில் கடந்த 100 வருடங்கள் ஈடுபட்டு வந்துள்ளது. உலமா சபை நிறைவேற்றுக்குழு பத்வாக்குழு, துறை சார்ந்தவா்கள், மற்றும் சட்டத்தரணிகள், முஸ்லிம் அமைச்சா்கள் ,பாராளுமன்ற உறுப்பிணா்கள். முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், சர்வமதகுழு என பலருடன் பல அமா்வுகளில் அவ்வப்போது முஸ்லிம் சமூகம் எதிா்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்மாணங்கள் எடுத்து வருகின்றன.
உலமா சபை என்பது மஸ்ஜிதுகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவரோ அல்லது கற்பித்தலுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டவரோ அல்லா். மாறாக மனித வாழ்வின் அனைத்துக் துறைகளுக்கும் வழிகாட்டும் இஸ்லாத்தை நடைமுறை வாழ்வில் பின்பற்றி ஏனையோர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவரே ஆலிம்களாகும். ஆலிம் என்பவா் ஆண்மீகத்துக்கப்பால் தனது பிரதேசத்தில் நடைபெறும் சகல தேசிய ஒற்றுமை தனது சமூகம் சாா்ந்த விடயங்களிலும் ஈடுபட்டு சமூகத்தின் வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகின்றனா்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனா்த்தங்கள் வெள்ளப்பெருக்கு மண்சரிவு போன்ற அணா்த்தங்களின் போதெல்லாம் இச் சபை இன , மத மொழி பிரதேச வேறுபாடின்றி அனைத்து மக்களது வாழ்வதாரங்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளது.
கல்வி இளைஞா் விவகாரம் விடயத்தில் இலங்கை முஸ்லிம்களின் கல்வி, கலாச்சாரத்தின் வளா்ச்சிக்காகவும் முஸ்லிம் பாடசாலைகளின் தேவைகளை நிறைவேற்றி வைக்கின்றது. சில முஸ்லிம் தனவந்தா்களை நாடி சில பாடசாலைகளது கட்டி வசதிகளுக்கும் ஆலோசனை வழங்கி அதனையும் நிறைவேற்றி வருகின்றது.
பெண்களை மதிக்குமாறு வலியுறுத்தும் இஸ்லாம் அவா்கள் விடயத்திலும் நியாயமாக நடக்க வேண்டும் என்றே கட்டளையிடுகின்றது. இதனடிப்படையில் பெண்மைக்கு மாசு ஏற்படா வண்ணம் கல்வி தேடல் உட்பட நடைமுறைசாத்தியமான அனைத்து வகையான உரிமைகளையும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.
அதே போன்று இந்த நாடடில் உள்ள முஸ்லிம் சட்டம், விவாகம் ,விவகரத்துச் சட்டம் போன்ற விடயங்களில் நீதியமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவில் தோன்றில் மத ரீதியானதுதம் குர்ஆண் ஷரிஆ சட்டங்களையும் ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றது.
ஜம்மியத்துல் உலமா சபை தலைமைக்காரியாலயம் தற்பொழுது கொழும்பு 10ல் உள்ள 281 ஜயந்த வீரசேகர மாவத்தை. மாளிகாவத்தையில் அமையப்பெற்றுள்ளது. இக்கட்டிடத்திற்கான காணி முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் பேரியல் அஷ்ரப் அவா்கள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தலைவா் றிஸ்வி முப்தி அவா்களின் வேண்டுகோலின் பேரில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிக்குச் சொந்தமான காணி கொள்முதல் செய்யப்பட்டமையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இக்கட்டிட நிரமாணத்தினை மேற்கொண்டு தற்பொழுது சகல செயலகமும் இக் கட்டிடத்தில் நடைபெற்று வருவதையுகுறிப்பிடத்தக்கது.
2019ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிா்தத ஞாயிறு தாக்குதலின் பின்னரான கால கட்டம் இந்த நாட்டில் ஏற்பட்ட வாழும் முஸ்லிம்களுக்கும் உலாமா சபைக்கும் ஏற்பட்ட சோதனை மிகுந்த காலமாகும்..இச் சவாலின் பின்னர் முஸ்லிம்களது ஆண்மிகம், மத வழிபாட்டுத் தளங்கள், குர்ஆண்பாடசாலைகள், மத சம்பந்தமான நுால்கள் மதசாா்பான நன்நோக்குச் சங்கங்கள், போன்ற செயற்பாடுகளில் பாரிய பிரச்சினைகள் எதிா்நோக்கினாா்கள். இன்றும் நுாற்றுக்கணக்கான இளைஞா்கள் ஆண்மீகத் தலைவர்கள் சந்தேகத்தின்பேரில் சிறையில் உள்ளனா்.
இவ்வடுவினால் முஸ்லிம் இளைஞா்களது கட்டுக்கோப்புக்களும் பல்வேறு பிரிவுகளாக இருந்த மத இயக்கங்களையும் ஒன்று சோ்க்கும் நிலைமை , அவா்களது இயக்கங்கள் தடை விதிப்பு ஆண்மீக நுால்கள் இறக்குமதி ஏற்றுமதி போன்ற பிரச்சினைகளுக்கு இன்றும் முஸ்லி்ம்கள் முகம் கொடுத்து வருகின்றனா்.
0 comments :
Post a Comment