இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம் சமூகம் ஓரங்கட்டப்படுவதான பார்வை சமூகத்தில் உள்ளது.
இந்நிலையில் சில சிவில் அமைப்புக்களும் பள்ளிவாசல் நிறுவனங்களும் முஸ்லிம்களுக்கான தீர்வு பற்றி கலந்துரையாடுவதையும் காண்கிறோம். இது நல்ல விடயம் என்ற போதிலும் அரசாங்கத்தை பொறுத்தவரை அரசியல் செயற்பாட்டாளர்களின் கருத்துக்களையே வேண்டி நிற்கிறது என்பதே யதார்த்தம்.
முஸ்லிம்களின் சிவில் அமைப்புக்களோ, பள்ளிவாசல் நிறுவனங்களோ அரசியல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு தீர்வு திட்டம் பற்றி பேசுவது காலம் கடத்தும் செயலாகும்.
அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளிடம்தான் தீர்வை கேட்டுள்ளதே தவிர கோயில்களிடமோ, சேர்ச்சுகளிடமோ அல்ல என்ற யதார்த்தத்தை நாம் புரிய வேண்டும்.
ஆகவே உடனடியாக முஸ்லிம்களை தலைவர்களாக கொண்ட கட்சிகள் ஓரிடத்தில் அமர்ந்து இது பற்றி பேச முன்வர வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுக்கிறது.
இந்த அழைப்பை ஏற்கும் படி கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதே பள்ளிவாசல் நிறுவனங்களினதும் சிவில் அமைப்புக்களினதும் கடமையாகும். உடன்படாத கட்சிகளின் பெயர்களை பள்ளிவாசல் நிறுவனங்கள் பகிரங்கமாக மக்களுக்கு சொல்ல வேண்டும்.
இந்த அழைப்புக்கு செவிசாய்க்காத கட்சிகளை மக்கள் தேர்தலில் ஓரம் கட்டுவது மக்கள் மீதுள்ள கடமையாகும்.
முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி
0 comments :
Post a Comment