தைத்திருநாளில் எமது மக்களின் இல்லங்களில் இருள் நீங்கி, ஒளி பிறக்க வேண்டும்! காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் வாழ்த்து செய்தி!



வி.ரி. சகாதேவராஜா-
கரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அம்மா உயிர்களுக்கு முதன்மை. அரிசி உழவிற்கு முதன்மை. அன்பு பெருக, அகம் மகிழ போற்றுவோம் பொங்கலை... இந்நாள் போல் எந்நாளும் இன்பம் பெருகட்டும். 2023 தைத்திருநாளில் எமது மக்களின் இல்லங்களில் இருள் நீங்கி, ஒளி பிறக்க வேண்டும் என்று காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தமது பொங்கல் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பதுபோல் இதுவரை நாம் அனுபவித்து வந்த
துன்பங்கள் அனைத்தும் மறைந்து நம் வாழ்வில் இன்பங்கள் பெருக வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம் என்றார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு வைக்கப்படும் பொங்கல் பானையில் பொங்கி வரும் பால்போல் அனைவரின் வாழ்விலும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கி வர வேண்டும்.

காலையில் எழுந்து குளித்து. புத்தாடை அணிந்து இறைவனை வழிபட்டு சூரியனுக்கு பொங்கலிட்டு இவ்வாண்டின் பொங்கல் திருநாளை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

இல்லங்களிலும், ஆலயங்களிலும் பொங்கல் வைக்கப்படுகிறது. பொங்கல் பானையிலிருந்து பொங்கி வரும் பால்போல் அனைவரின் வாழ்விலும், தொழிலிலும் இன்பங்களும், செல்வங்களும் பொங்கி வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இன்று பிறக்கும் தை முதலாகவும், தமிழ் புத்தாண்டாகவும், தமிழர் திருநாளாகவும் எமது மக்களுக்கு இனிய ஆண்டாக மலர வேண்டும். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக என்று காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :