கந்தளாயில் வீடொன்றினுள் புதையல் தோன்டிய மூவர் கைது.



எப் முபாரக்-
ந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாத்தியாகம பகுதியில் புதையல் தோன்டிய மூவரை (16) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் உரிமையாளர் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதையல் தோன்டுவதாக கந்தளாய் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது வீட்டின் சமையலறை பகுதியில் இருபது அடிவரை தோன்டிக்கொண்டிருந்த போதே மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்த ஒருவர் இந்த இடத்தில் புதையல் இருப்பதாக கனவில் வந்து கூறியதாக தெரிவித்ததை அடுத்தே அந்த இடத்தில் தோண்டியதாக கூறப்படுகின்றது.

இதற்கு முன்னரும் அந்த வீட்டில் புதையல் தோன்றிய போது ஐந்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் மீண்டும் அந்த இடத்தில் புதையல் தோன்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புதையல் தோன்டிய இடத்தில் பெரிய இரும்பு சங்கிலி,தண்ணீர் இறைக்கும் மோட்டார்,இரும்புக் கூர், தடுப்பு பொருட்கள் உட்பட பல இரும்பு பொருட்கள் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :