மட்டக்களப்பு மாவட்ட கல்வி சுகாதார சமூகநல திட்டங்களுக்கான பல கோடி ரூபாய் பெறுமதியான ஓர் உடன்படிக்கை மலேசிய மட்டக்களப்பு றோட்டரி கழகங்களுக்கு இடையே கைச்சாத்தானது.
பல கோடி ரூபாய் பெறுமதியான இந்த ஒப்பந்தம் நேற்று மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது .
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத் தலைவர் ரோட்டரியன் பு. ரமணன் மலேசிய கோலாலம்பூர் மத்தி ரோட்டரிக் கழக தலைவி றோட்டரியன் அஞ்சலினா ஆரோக்கியசாமி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
மேலும்,மலேசிய மாவட்ட ரோட்டரி ஆளுநர் ராஜசேகரன் பிண்டி மற்றும் கனகேஸ்வரி சுப்பையா ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த பல கோடி ரூபாய் பெறுமதியான இந்த வேலைத் திட்டங்கள் எதிர்வரும் மாதங்களில் ஆரம்பமாக இருக்கின்றது .இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பலனடைய இருக்கின்றார்கள் என்று ரோட்டரி கழகத் தலைவர் பு.ரமணன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment