புதிய வேந்தர் நிகழ்வில் பங்குபற்றிய பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஒரு தேசியப் பல்கலைக்கழகமாக மிளிர்ந்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய பங்களிப்புக்கள் குறித்து நிகழ்வில் கருத்துரைத்தார். ஒரு முஸ்லிம் பல்கலைக்கழம் என்பதற்கு அப்பால் இலங்கை தேசத்தின் பல்கலைக்கழகம் ஒன்றாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் பல்லினங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினருக்கான வசதி வாய்ப்புக்களையும் வேந்தர் அவர்கள் கேட்டறிந்து கொண்டதுடன் அவற்றினை எதிர்காலத்தில் விருத்தி செய்வதற்கு உபவேந்தருடன் இணைந்து செயற்படப்போவதாகவும் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மூலமான கற்கையினை மேலும் விரிவுபடுத்துதல், ஆங்கில மற்றும் தொழில்நுட்ப ஆற்றல்களை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் விருத்திசெய்வதன் மூலம் அவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றவர்களாக உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஒன்றினை நிறுவுவதற்காக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் எடுத்துவரும் முயற்சிக்கு தன்னால முழு ஒத்துழைப்பினையும் வழங்கப்போவதாகவும் புதிய வேந்தர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் புதிய வேந்தருக்கான நினைவுச் சின்னத்தினை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் வழங்கிவைத்தார். இக்கலந்துரையாடல் முடிவுற்றதுடன் பல்கலைக்கழக சுற்றுச்சூழலினை பார்வையிட்ட புதிய வேந்தர், பல்கலைக்கழத்தின் கலாநிதி அஷ்ரஃப் ஞாபகார்த்த நூலகத்திற்கும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நூலக வசதிகளையும் கண்டறிந்து கொண்டடார்.
வேந்தர் பாயிஸ் முஸ்தபாவுடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூராமித் அவர்களும் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment