வெளிநாட்டில் தொழில்புரியும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு, நிவாரண உதவி வழங்கும் திட்டம் ஒன்றை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தால் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதன்படி வெளிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் சுயதொழில் உதவிகள் வழங்கப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஜப்பான்,கொரியா மற்றும் அவுஸ்திரேலியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் பணிபுரியும் வேலைசெய்யும் தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒரு பிள்ளைக்கு 5000 /-பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி 5 வருடத்துக்குற்பட்டவர்களது குடும்பத்தினரும் இந்த உதவி திட்டத்துக்காக. தமது பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களுக்காக விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறே வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு திரும்பிய (5 வருடங்களுக்குள்) குடும்பத்தினருக்கு 50000/- பெறுமதியான சுயதொழில் உதவி வழங்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்திட்டத்துக்கு தகுதியுடைவர்கள், தமது பகுதியிலுள்ள பிரதேச செயலகத்தில் கடமை புரியும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்(FDO) ஊடாக தேவையான ஆலோசனை விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் என, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தற்போது நாவலப்பிட்டி போன்ற நாட்டின் பல பிரதேச செயலங்களில் , பாடசாலை மாணவர்கள் கிராமசேவையாளர் மற்றும் அதிபர் ஊடாக உறுதிப்படுத்திய விண்ணப்பங்களை, பிரதேச செயலங்களில் கையளிக்கும் நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment