தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருக்கின்ற உலகப் புகழ்பெற்ற ஓவியர் மு.பத்மவாசன் நேற்றுமுன்தினம் திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் செய்தார்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் .த.கஜேந்திரனின் வழிகாட்டலின் கீழ் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு உலகப்புகழ் பெற்ற ஓவியர் மு.பத்மவாசன் விசேட கருத்தரங்கையும், ஓவியத்தினுாடாக இறைவனை காணலாம், நாவலர் பெருமான் - வாழ்வும் வாக்கும், சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை சரித்திரம் போன்ற விடயங்களை உள்ளடக்கிய வகையில்
ஓவியம் வரைதல் நிகழ்வூடாகவுமா மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார்.
இந்நிகழ்வானது திருக்கோவில் பிரதேச கலாசார நிலையத்தில் நேற்று இடம்பெற்றது
இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன், உதவிக் கல்வி பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா, ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வண்ணக்கர் வ.ஜெயந்தன், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ், திருக்கோவில் பிரதேச செயலக முன்னாள் கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் கண. இராஜரெத்தினம் , திருஞானவாணி அறநெறி பாடசாலை தலைவர் ஆ.கணேசமூர்த்தி ,எழுத்தாளர் சு.கார்த்திகேசு, திருக்கோவில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் ஊடகவியலார்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment