மலையக அரசியல் அரங்கத்தின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புறப்பாடு ஹட்டனில்



2023 நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நுவரெலியா மாவட்ட இளைஞர், யுக்திகள், பொது அமைப்புகள், தோழமைக் கட்சிகள் உடனான ஆரம்ப கலந்துரையாடல் ஒன்றை மலையக அரசியல் அரங்கம்

30-12-2022 அன்று காலை 9:30 முதல் மாலை 4:30 வரை ஹட்டன் கிவி ஹோட்டலில் (மேல்மாடி - இடது மண்டபம் டிம்புள வீதி - மல்லியப்பு. ஹட்டன்) ஒழுங்கு செய்துள்ளது அரங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வின் நெறிப்படுத்தலில், செயலாளர் நா. கிருஷ்ணகுமார் சந்திப்பைச் செயற்படுத்துவார். மகளிர் இணைப்பாளர்களாக மகளிர் அணியின் ரஷீதா - டிலானி ஆகியோர் செயற்படவுள்ளதுடன் சந்திப்பு ஒழுங்கமைப்புப் பணிகளை தேசிய அமைப்பாளர் பி. கே. ரவி மேற்கொண்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு அவசியாமான ஆலோசனைகளை வழங்குவதுடன் மாதிரி விண்ணப்பங்களும் விநியோகிக்கப்படவுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் தமது தேசிய அடையாள அட்டைப் பிரதியுடன் வருகை தரவேண்டும் எனவும்

இந்தச் சந்திப்புக்கஆன தொடர்புகளுக்கு மஸ்கெலிய பிரதேச சபை உறுப்பினரும் அரங்கத்தின் சிவில் சமூக இணைப்பாளருமான K. சுரேஷ்குமாரைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :