இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்ட மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று திங்கட்கிழமை (5) ஓட்டமாவடி பாத்திமா பாலிகா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஆலோசனைக் கூட்டம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் தலைமையில் இடம்பெற்றது.
இதில், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.ஐ.அஹ்ஸாப், எம்.ஏ.ஜாபீர் கரீம் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களான எம்.பி.எம்.சித்தீக், எம்.பி.ரீ.கான், எம்.பி.எம்.நபீர், எச்.எம்.ஆதம் லெப்பை, எஸ்.எம்.கடாபி, மற்றும் பாடசாலைகள், அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இவ் ஆலோசனை கூட்டத்தில் மாணவர்ளுக்கு செயலட்டை தயாரித்து விநியோகம் செய்வது தொடர்பாகவும், அதன் செலவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
0 comments :
Post a Comment