அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தீடீர் காலநிலை மாற்றம் பலத்த காற்று; கடல் கொந்தளிப்பு காரணமாக மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மரங்கள் வீழ்ந்து கடும் குளிர் காற்றும் வீசுகின்றது.
இக்காலநிலை மாற்றம் காரணமாக பிரதேசத்து மக்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சாய்ந்தமருதில் உள்ள பௌசி விளையாட்டு மைதானத்தின் கடலரிப்புத் தடை எல்லை அடித்தளம் முற்றாக கடலரிப்பில் சேதமுற்றுள்ளது. கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடல் மீன்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
மழையுடன் கூடிய குளிர் காற்று வீசுவதனால் மக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
0 comments :
Post a Comment