25 வயதுக்குட்பட்ட "தேசிய இளையோர் கபடி சாம்பியன்ஷிப் 2022" போட்டி தொடரின் ஆண்கள் பிரிவின் சம்பியனாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர் மதீனா விளையாட்டு கழகம் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது
இலங்கை தேசிய கபடி சம்மேளத்தினால் 25 வயதுக்குட்பட்ட "தேசிய இளையோர் கபடி சாம்பியன்ஷிப்" போட்டி கொழும்பு டொரிங்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் (03,04/12/2022) இடம்பெற்றது.
இப் போட்டியில் 25 மாவட்டங்களிலும் இருந்து 25 அணிகள் பங்கு பற்றி இறுதி போட்டியில் அம்பாறை மாவட்ட (மதீனா விளையாட்டு கழகம்) அணியும் யாழ்ப்பாண மாவட்ட அணியும் 52:23 என்ற புள்ளியில் அம்பாறை மாவட்ட (நிந்தவூர் மதீனா விளையாட்டு கழகம்) இச் சுற்றுத் தொடரின் ஆண்கள் பிரிவின் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இச் சுற்றுத் தொடரின் சிறந்த வீரராக இலங்கை தேசிய கபடி அணி வீரரும், அம்பாறை மாவட்ட நிந்தவூர் மதீனா விளையாட்டு கழக கபடி அணி தலைவர் எஸ் எம் சபிஹான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இப்போட்டியில் வெற்றி பெற்று கிழக்கு மாகாணத்திற்கும், அம்பாறை மாவட்டத்திற்கும், நிந்தவூர் மண்ணுக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கும் மதீனா விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கும், அவ் அணியின் பயிற்றுவிப்பாளர், சர்வேதேச கபடி நடுவரும், உடற்கல்வி ஆசிரியர், மதீனா கழகத்தின் உப தலைவருமான எஸ். எம் இஸ்மத் அவர்களுக்கும் இன்னும் இது போல் பல வெற்றிகளை பெற பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment