2004 ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பொழுது அழிவுற்ற தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தை உலக புகழ்பெற்ற இந்திய ஓவியர் மு. பத்மவாசன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
குருகுலப்பணிப்பாளர் கண.இராஜரெத்தினம் குழுவினரை அழைத்துச் சென்றார்.
அங்கு சுவாமி தந்திர தேவா அவர்களினால் நிறுவப்பட்ட குருகுல ஸ்தாபகர் தம்பையா சுவாமிகளின் திருவுருவ சிலையை வீழ்ந்து வணங்கினார்.
கடல் அருகே இருந்த குருகுலம் முற்றாக அழிந்தபோதிலும் இந்த சிலை மட்டுமே ஆழிப்பேரலை அனர்த்தத்தில் தப்பிய அதிசயத்தை கேட்டறிந்தார் .வியந்தார் .
அவருடன் திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் கே சதிசேகரன் உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் கு. ஜெயராஜ் எழுத்தாளர் கார்த்திகேசு ஆகியோர் சென்றிருந்தனர் .
அங்கு ஓவியர் பத்மவாசனுக்கு குருகுல பணிப்பாளர் இராஜரெத்தினம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பொழுது குருகுலத்தில் தங்கியிருந்த 55 மாணவர்களுள் தெய்வாதீனமாக 54 மாணவர்கள் உயிர் தப்பினர். ஒரு மாணவரும் அங்கு பணியாற்றிய இருவருமாக மூவர் மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment