புதிய அஹதிய்யா பாடசாலை அங்குரார்ப்பண நிகழ்வு



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
டந்த 2022.12.07ஆம் திகதி புதன்கிழமை சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரி அதிபர் எம்.ஜே.எம்.நஸ்மி அவர்களின் தலைமையில் ஹிக்மதுன் நஸ்ரியா அஹதிய்யா சன்மார்க்கப் போதனாபீட பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் கிராஆதுடன் ஆரம்பமானது.

பிரதம அதிதியாக அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் பிரதித் தலைவரும் தேசிய சபை உறுப்பினருமான பாரூக் பதீன் ஆசிரியர், விஷேட அதிதியாக இஸ்லாம் பாட ஆசிரியர் ஆலோசகரும் , தகவல் தொழில்நுட்ப உயர் சபைக் குழு உறுப்பினரும் வளவாளருமான அஷ்ஷேய்ஹ் எம்.ஐ. தஹ்லான், கெளரவ அதிதிகளாக புத்தளம் மாவட்ட இணைப்பாளர் அஷ்ஷேய்ஹ் ஏ.ஏ.எம்.பஸ்மி , மனிதவள முகாமைத்துவக்குழு உறுப்பினர்களான எம். என்.எப்.நலீஸா அதிபர், ஏ.எச்.தஸ்னீம் ஆசிரியை , சிலாபம் பிரதேச கலாசார உத்தியோகத்தர் தேவிகா லியனாராச்சி மற்றும் பெருந்திரளான பெற்றோர்கள் ,நலன் விரும்பிகள் ,பழைய மாணவர்கள் ,உலமாக்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அஹதிய்யா சன்மார்க்கப் போதனா பீட பாடசாலையின் ஆரம்பகால வரலாறு, அதன் பயன்கள் புதிய கட்டமைப்புக்கள் பற்றிய விளிப்பூட்டல் விளக்கங்கள் எடுத்துக் கூறப்பட்டன . கலந்துரையாடலின் பின்னர் ஹிக்மதுன் நஸ்ரியா அஹதிய்யா பாடசாலை நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். 

தலைவர் எம்.எச்.எம்.பிஸ்ரி ஆசிரியர்
செயலாளர் எம்.எஸ்.எம்.ஸுபைர் அகில இலங்கை சமாதான நீதிவான் மற்றும் மரணவிசாரணை அதிகாரி)
பொருளாளர் எம்.ஏ.அரூஸ்
உப தலைவர் அஷ்ஷேய்ஹ் எம்.ரீ.எம்.பர்ஸான்
உப செயலாளர் எம்.எம்.எம்.ஷெரீன் ஆசிரியை
உப பொருளாளர் எம்.கே.எம்.றம்சான் உறுப்பினர்களாக எம்.எஸ்.எம்.ஸிபான் , ஆசிரியர்களான எஸ்.ஐ.பரீனா பேகம், ஏ.ஏ.யூ.எஸ்.ஸல்மா ( ஓய்வு பெற்ற ஆசிரியை )எம்.ஐ.எப்.முஸ்பிஹா, எம்.எம்.முஹர்ரப் ஆசிரியர் கணக்காய்வாளராக என்.எம்.எம்.இர்பான் ஆகியோரும் ஆலோசகர்களாக எம்.ஐ.எம்.நஸ்மி அதிபர், நஸ்ரியா மத்திய கல்லூரி, அஷ்ஷேய்ஹ் எம்.ஐ.தஹ்லான் ஆசிரியர் ஆலோசகர் (இஸ்லாம்) மற்றும் தகவல் தொழில்நுட்ப உயர் உப குழு உறுப்பினர்) ஸட்.எம்.இக்ராம்,அஹதிய்யா பாடசாலை அதிபராக எம்.எஸ்.எப்.நஸீரா,உப அதிபராக ஏ.ஏ.யூ.எஸ்.ஸல்மா ஆகியோரும் ஆறு உப குழுக்களுக்குமான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர் . 

மேலும் அஹதிய்யா பாடசாலை ஆசிரியர் நியமனமத்திற்காக விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகப் பரீட்சையை மனிதவள முகாமைத்துவக்குழுவினரால் நடாத்தப்பட்டு க.பொ.த (உயர் தரம் ) மூன்று பாடங்களில் சித்தியடைந்தவர்களும் , பட்டதாரிகளும் தெரிவுசெய்யப்பட்டனர் . ஆசிரியர்களுக்கான முன் பயிற்சி நெறிகளை நடாத்துமாறும் அதற்கான முயற்சிகளை எடுக்குமாறும் நிருவாகிகளால் வேண்டப்பட்டதுடன் பரீட்சையில் சித்தியடைந்த அஹதிய்யா மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :