கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தகவல்கள் முகாமைத்துவ (IMS) தரவுத்தளம் கிழக்கின் ஆளுநரினால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பனம்அபு அலா –
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தகவல்கள் முகாமைத்துவ (IMS) தரவுத்தளம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று (17) மாலை மாகாண பிரதிப் பிரதம செயலக கூட்ட மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் (திருமதி) கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நாகராஜா தனஞ்ஜெயனினால், தகவல்கள் முகாமைத்துவ (IMS) தரவுத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்ட நோக்கம் பற்றியும், தரவுத்தளத்தில் எவ்வாறு உள்நுழைவது மற்றும் பதிவுகளை எவ்வாறு பதிவிடுவது பற்றிய முழுமையான தகவல்களை அதிதி உள்ளிட்ட மாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்களுக்கு மிக விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில், ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், விவசாய அமைச்சின் செயலாளர் எல்.கே.ஜி.முத்துபண்டா, பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஏ.மன்சூர், பிரதிப் பிரதம செயலாளர் (ஆளனி மற்றும் பயிற்சி) திருமதி ஆர்.யூ.ஜெலீல், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) என்.தமிழ்ச்செல்வன், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) எஸ்.குலதீபன் உள்ளிட்ட மாகாண திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் தகவல்கள் முகாமைத்துவ முறைமையில் (IMS) தரவுத்தளத்தில் கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தரவுகளை பதிவேற்றம் செய்ததில் மாகாணத்தில் முதல் 10 இடங்களைப் பெற்றுக் கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்கு ஆளுநர் சான்றிதழ் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :