HIV மற்றும் சிபிலிஸ் தொற்றுக்களை தடுத்தல் எனும் தொனிப்பொருளில் வருடாந்த மாவட்ட மீளாய்வுக் கூட்டம் கல்முனையில் !



நூருல் ஹுதா உமர்-
தாயிலிருந்து குழந்தைக்கு HIV மற்றும் சிபிலிஸ் போன்ற தொற்றுகள் ஏற்படுவதனை தடுத்தல் எனும் தொனிப்பொருளில் வருடாந்த மாவட்ட மீளாய்வுக் கூட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் ரிபாஸ் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம் என் எம் தில்ஷான் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மீளாய்வுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். சேரசிங்க உள்ளிட்ட பிரிவு தலைவர்களும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவு தலைவர்களும் பங்கு கொண்டதுடன் தத்தமது மீளாய்வு அறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தனர்.

கல்முனை பிராந்தியத்தில் பாலியல் தொற்றுக்கள் சில பிரதேசங்களில் அதிகரிப்பதாக சுகாதார உத்தியோகத்தர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பாலியல் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம் என் எம் தில்ஷான் அவர்கள் இதனை பணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தமையினால் இவ்விசேட கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு தாயிடமிருந்து தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக காணப்பட்ட போதிலும் தாயிடமிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான விசேட பொறிமுறைகள் இக்கூட்டத்தில் கண்டறியப்பட்டதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களை இல்லாதொழிப்பதற்கான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட உள்ளதாகவும் பணிப்பாளர் இதன்போது தெரிவித்திருந்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :