"ஒருநாள் ஒரு வேலைத் திட்டம் " என்ற நிகழ்ச்சிச் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்லடி உதயம் விழிப்புலனற்றோர் நிலையத்திற்கு நேற்று உதவி வழங்கப்பட்டது.
கிழக்கின் சமூக செயற்பாட்டாளரும் ,காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் இத் திட்டத்தின் கீழ் நேற்று இந்த விஜயம் இடம்பெற்றது.அவருடன் சமூக செயற்பாட்டாளரான வி.ரி.சகாதேவராஜாவும் சமுகமளித்திருந்தார்.
புலம்பெயர் தேசத்தில் இருக்கக்கூடிய சில தாயகப் பற்றுள்ள பரோபகாரிகளின் உதவியோடு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நேற்று, உதயம் நிலைய தலைவர் விமல் முன்னிலையில் அவர்களுக்கு நிதிஉதவி வழங்கியதோடு விருந்துபசாரமும் இடம்பெற்றது.
தொடர்ச்சியாக ஒளிவிழா வின் போது உலர்உணவு வழங்குகின்ற நிகழ்ச்சி திட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று உதயம் விழிப்புலனற்றோர் சங்க தலைவர் விமல் கேட்டுக் கொண்டதற்கு தவிசாளர் இணங்கினார்.
எதிர்வரும் மார்கழி மாதத்தில் அந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
0 comments :
Post a Comment