கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியை எம்.எம்.ஏ. ஜானுபா ஆசிரியை சேவையிலிருந்து ஒய்வு.


மூன்று தசப்த காலமாக ஆசிரியையாக கடமையற்றி ஒய்வு நிலையினையடைந்த எம்.எம்.ஏ. ஜானுபா சேவை நலன் பாராட்டு விழா கடந்த 31.10.2022 (திங்கட்கிழமை) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் சேர் றாஸீக் பரீட் கேட்போர் ௯டத்தில் கல்லூரியின் அதிபா் யூ.எல்.எம். அமீன் தலைமையில் இடம் பெற்றது.

சிரேஷ்ட ஆசிரியை எம்.எம்.ஏ. ஜானுபா தனது ஆசிரியர் சேவையினை 1990ம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு சுமார் மூன்று தசாப்தமாக (30 ஆண்டுகள்) சேவையாற்றியதுடன் 2008ம் ஆண்டு காலப் பகுதியில் மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியிலும் தனது ஆசிரியர் சேவையினை மேற்கொண்டுள்ளார்.

ஒய்வு பெற்ற சிரேஷ்ட ஆசிரியை எம்.எம்.ஏ. ஜானுபா கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பழைய மாணவியாக, சங்கீத இஸ்லாம் பாட ஆசிரியையாக, தேசிய கீதம், கல்லூரி கீதம், கலை இலக்கியம், பாடல்கள் குழு, இசைக்குழு, இணைப்பாடவிதான செயற்பாடுகள், பகுதித்தலைவி, விளையாட்டு குழு போன்ற செயற்பாடுகளில் கல்லூரியின் வளர்ச்சி, அபிவிருத்தியில் தன்னுடைய முழுமையான அற்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார்.
நிகழ்வில் அதிபர், பிரதி உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் எம்.எம்.ஏ. ஜானுபா ஆசிரியை பற்றிய நினைவு உரை, கவிதைகள், கடந்து வந்த நினைவலைகள் என்பனவற்றை சபையினர் மத்தியில் பகிர்ந்து கொண்டனர்.
 
ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடை பெற்ற சேவை நலன் பாராட்டு விழாவினை சங்க தலைவா் அலியாா் றிபான், நிருவாக உறுப்பினர் முஸ்தபா ஹக்கீம் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். சிரேஷ்ட ஆசிரியை எம்.எம்.ஏ. ஜானுபா ஆசிரியையின் மூன்று தசாப்த சேவையினை பாராட்டி கல்லூரி சார்பான நினைவு பரிசினை கல்லூரியின் முதல்வர் யூ.எல்.எம். அமீனால் வழங்கி வைக்கப்பட்டது.
தரம் 06 தொடக்கம் 13 வரையான பகுதித்தலைவர்கள் அதனுடன் தொடர்பான ஆசிரியர்கள் நினைவு பரிசில்கள் மற்றும் பொன்னாடை போற்றி தமது உளப்பூர்வமான கெளரவத்தை வழங்கினர்.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். மசூது லெவ்வை, ஆர்.எம். அஸ்மி காரியப்பர், உதவி அதிபர்களான ஏ.எச். நதீரா, எம்.எஸ். மனுனா, என்.டி. நதீகா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசார ஊழியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஊடக பிரிவு
மஹ்மூத் மகளிர் கல்லூரி,
(தேசிய பாடசாலை) கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :