அம்பாறை மாவட்ட செயலகத்தினது இட மாற்ற சபை கூட்டம் பற்றி விழிப்பூட்டல் !நூருல் ஹுதா உமர்-
ம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இட மாற்ற சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடுகின்றது. இம் மாவட்ட செயலத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட பிரதேச செயகங்களில் கடமையாற்றுகின்ற ஊழியர்களின் 2023 ஆம் ஆண்டுக்கான இட மாற்ற கோரிக்கைகளை பரிசீலிப்பார்கள். இந்நிலையில் வருடாந்த இட மாற்றத்துக்கு விண்ணப்பித்து உள்ள ஊழியர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டாம் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரி உள்ளது.

ஊழியர்களின் நலன்களை முன்னிறுத்தி கூட்டத்தில் பொது ஊழியர் சங்கம் ஆஜராகின்ற நிலையில் விண்ணப்பதாரிகள் இயலுமான விரைவில் தொடர்பு கொள்ளுமாறு அதன் தலைவர் எஸ். லோகநாதன் அறிவித்து உள்ளார். அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இட மாற்ற சபை கூட்டத்தில் கடந்த 15 வருடங்களாக அரசாங்க பொது ஊழிய சங்கம் பங்கேற்று ஊழியர்களின் நலனுக்காக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :