வை.எம்.எம். ஏ செயற்குழு உறுப்பினர்களுக்கும் அமைச்சர் விதுரவிக்கிரம நாயக்காவுக்கும் இடையே சந்திப்புஅஷ்ரப் ஏ சமத்-
வை.எம்.எம். ஏ அமைப்பின் தலைவா் இஹ்சான் ஏ ஹமீட், தலைமையிலான செயற்குழு உறுப்பினர்களும் நேற்று 16ஆம் திகதி புத்தசாசன மதவிவகாரங்கள் , கலாச்சார அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்காவினைச் அவரது அமைச்சில் வைத்துச் சந்தித்தனா். இச் சந்திப்பின்போது முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளா் இப்றாஹிம் அன்சாா் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனா்.

இச் சந்திப்பில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் மத விவகாரப் பிரச்சினைகள் கலந்தாலோசிக்கப்பட்டன குர்ஆன் பாடசாலைகளில் மீள ஆரம்பிப்பதற்கும் அவற்றுக்கான குர் ஆன் பாடத்திட்டங்கள் ,பற்றி உரிய குழு துரிதப்படுத்துதல், மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் இஸ்லாமிய புத்தகங்கங்கள் அரபு நுால்கள்,குர்ஆன் போன்றவைகள் இறக்குமதி செய்வதற்காக இருக்கும் தடைகளை நீக்குதல், பள்ளிவாசல்கள் நிர்வாகம், வக்பு சபையின் நடவடிக்கைகள், மற்றும் இஸ்லாமிய கலாச்சார விவகாரம் போன்ற பிரச்சினைகளும் இங்கு ஆராய்யப்பட்டன.
மேற்படி கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பற்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சா் முஸ்லிம் சமய விவகாரப் பணிப்பாளருக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் தனக்கும் அறிக்கை சமா்ப்பிக்கும்படி ஆலோசனைகளை வழங்கினாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :