"இஸ்லாத்தின் வேர்களும் - விழுதுகளும்" புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகுவைத்தில் "இஸ்லாத்தின் வேர்களும் - விழுதுகளும்" புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் முனைவர் மு. சதீதுத்தீன் ஃபாஜில் பாகவீ M.A., M.Phil., Ph.D., (தலைமை இமாம், குராஸானி பீர் பள்ளிவாசல் & முதல்வர், ஜாமிஆ அல்ஹுதா அரபிக் கல்லூரி, அடையார், சென்னை மற்றும் உறுப்பினர், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி, தமிழ்நாடு அரசு) எழுதிய நூறு நபித்தோழர்களின் வரலாற்றை சிறப்பாக எடுத்துரைக்கும் "இஸ்லாத்தின் வேர்களும் - விழுதுகளும் (முதல் பாகம்)" புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 18ம் ஆண்டு ஐம்பெரும் மீலாது விழாவில் வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு பிறகு நடைபெற்றது.

சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ தலைமை தாங்கினார். பொருளாளர் எம். ஜாஹிர் ஹுஸைன் முன்னிலை வகித்தார். மவ்லவீ ஹாஃபிழ் அல்ஹாஜ் எஸ்.எஸ் ஹைதர் அலி மிஸ்பாஹி (முதல்வர், உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி & தலைவர், மஜ்லிஸுல் உலமா சபை, மேலப்பாளையம், திருநெல்வேலி) புத்தகத்தை வௌியிட்டார். அதனை குவைத்தின் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

விழாவில் குவைத் வாழ் தமிழர்கள் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :