விவசாயத்துக்கு மேலதிகமாக வயல்களில் உள்ள வரம்புகளில் உணவுப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள கமநல சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அந்த வகையில் திருக்கோவில் பிரதேசத்தில் வயல் வரம்புகளில் உணவுப்பயிர்ச்செய்கையினை முன்னெடுப்பதற்காக விவசாயிகளுக்கு பயிர் விதைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கமநல நிலைய அபிவிருத்தி உத்தியோத்தர்
மயில்வாகனம் அஜந்தன் தலைமையில் நேற்று முன்தினம்(20) நடைபெற்றது.
வரம்புகளில் உணவுப்பயிர் செய்கையினை மே ற்கொள்வதனுாடாக தேசிய உணவு ப்பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் எனூம் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச விவசாயிகளுக்கு மரக்கறி விதைகள் நேற்று முன்தினம்(20) வழங்கி வைக்கப்பட்டது.
இப் பயிர்செய்கையின் விதைகள் நடும் ஆரம்கட்ட நிகழ்வானது தம்பிலுவில் முனையூர் விவசாய கண்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், தம்பிலுவில் கமநல நிலைய அபிவிருத்தி உத்தியோத்தர் ம .அஜந்தன் , விவசாய போதனாசிரியர்களான எஸ்.சுஜிகாந்தன் ,எஸ் .சித்திரன் மற்றும் , தம்பிலுவில் ஏபிசி தலைவர் ச.நடேசபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு விதைகளை வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment