சம்மாந்துறையில் புதிய நெல் உற்பத்தி சிறந்த எக்ரோ குறுப் அம்பாறை அரச அதிபா் பாராட்டு



அஷ்ரப் ஏ சமத்-
ம்பாறை மாவடட்ததில் 2022 2023 மகாபோகததில் நெற்செய்கை மேற்கொள்வதறக்கான அனைதது பூர்வாங்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதே நேரம் மேதகு சனாதிபதி அவர்களின்
ஆலோசனைகளுக்கமைவாக சிபாரிசு செய்யப்பட்டுள்ள சேதன மற்றும் அசேதன பசளைகள் யாவும் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் நடந்துள்ளன. இம்முறை விவசாயிகள் சிறந்த விளைச்சலைப் பெறுவதற்கு இவ்வாறான அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதை நெல் கிடைப்பது
ஒரு வரப்பிரசாதமாகும் எனவும் சம்மாந்துறை எக்றோ குறூப் முன்னெடுத்து வரும் பல பணிகளில் பிரதான பணியான அத்தாட்சிப்படுதத்ப படட் விதைநெல் உற்பத்தித்திடடத்தின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.ஜே.எம். டக்ளஸ் தெரிவித்தார். இந் நிகழ்வு கடந்த வாரம் சம்மாந்துறையில் நடைபெற்றது.

அரச அதிபா் அங்கு மேலும் கூறுகையில்,
விதை நெல் உற்பத்தித் திட்டம் இங்கு அமுலுக்கு வரும் காலகடடத்தில்; நான் இருந்திறாவிட்டாலும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளின் உரையின் போதும் இவ்வமைப்பின் நடவடிக்கைகளின் போதும், மற்றும் இவர்களின் முன்னேற்ற அறிக்கைகளைப் பார்வையிடும் போதும் இதன்
முன்னேற்றப்படிகள் தெட்டத்தெளிவாக விளங்குகின்றன விவசாயிகள் மத்தியில் பாரிய சேவையொன்றைச் செய்து வருகின்றன. எனவே குறைந்த செலவில் கூடிய விளைச்சலைப் பெறவேண்டுமேயானால் இவ்வாறான தரமான விதைநெல் பாவனை அவசியமாகும. அதனடிபபடையில் இம்மாவடடத்தின் விதைநெல் தேவையை சம்பூரணமாக நிறைவேற்ற வேணடும் என்பதற்காக எக்ரோ குறுப்பின் சேவை அத்தியவசியமான
தொன்றாகும். ஆகையால் எதிர்காலத்தில் என்னால்ஆன அனைத்து உதவிகளையும் வழங்குவேன் எனக் கூறியதோடு, இவ்வமைப்பின் சேவையையும் பாராடடி; உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழவில் கலநது கொணட கௌரவ அதிதியும் அம்பாறை மாவட்ட விவசாய பணிப்பாளருமான அல்ஹாஜ் எம்.எஸ்.ஏ .கலீஸ், எக்ரோ குருப் ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரையும் மிகவும் கச்சிதமான முறையில் இயங்கிக்கொண்டு வருவதை என்னால் அவதானிக்க முடிகிறது. அந்த
வகையில் மேற்படி அத்தாட்சிப்படுத்தப்பட்ட  விதைநெல் உற்பத்தித்திட்டம் இங்கு அமைவதற்கு தானும் அம்பாறை மாவட்ட செயலாளரும சிபாரிசு செயததையும்; குறிபப்பிடடு; நான் பூரண திருப்த்தியையும் மன நிறைவையும் அடைகிறேன் என உரையாற்றினார்;

மேலும் அவர் கூறுகையில் இத்திட்டம் கிடைக்கப்பெறுவதற்கு எக்ரோ குருப் ஸ்தாபகத் தலைவரான ஓய்வு பெற்ற நிருவாக உத்தியோகத்தர் ஏ.எம்.இல்யாஸ் அவர்களும், ஸ்தாபக பிரதித்தலைவரான ஓய்வு
பெற்ற உதவி விவசாயப் பணிப்பாளரான ஏ.எல்.முஹம்மட் பரீட் அவர்களும் இணைந்து இரவு பகல் என்று பாராமல் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கெல்லாம் சென்று பல சவாலக்ளுககும் மத்தியில் தேவையான அனைத்து ஆவணங்களையெலலாம் பெற்றுக் கொள்வதற்கு 
எடுத்துக்கொணட் முயற்சிகளின் வெளிப்பாட்டிற்கு இன்றைய நிகழ்வு ஒரு சான்றாகும்.
சம்மாந்துறையில் எக்றோ குறூப்பின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட  தொகுதி வெளியீட்டு விழா -அது மட்டுமல்ல பிரதிப்பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்,அதிபர்கள், ஆசிரியர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தரக்ள் விவசாயப் பிரதிநிதிகள் மற்றும்
விவசாயிகள் என பலதரபபடட்வர்கள் இவ்வமைபபுடன் இணைநது; கொணடு; மிகவும் அர்பப்ணிபபுடன் செயலாற்றி வருவதும் இதன் வெற்றிக்கு காரணமாகும்.

எனவே எதிர்காலத்தில் மாகாண மட்டத்திலே முதல் தரமானதும், ஏனைய அமைப்புகக்ளுககு; ஓர் எடுத்துக்காட்டான அமைபபாகவும் மிளிர வேண்டுமென வாழ்த்தி உரையாற்றினாா்

மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பேராதனை விவசாய திணைக்கள விதை அத்தாட்சிப் பிரிவு பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.எம்.ஆர். அபேகோண் இவ்வமைப்பினால் 2022 சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விதைப் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிய விதைநெல் மாதிரிகள்
அனைத்தும் பரிசோதனைக்குட்படுததி 100 வீதம் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக முடிவுகள் வந்துள்ளன  இம்முடிவு மிகவும் பாராட்டுக்குரிய விடயமாகும் அது மடடுமல்ல இவ்வமைபப்பி்னால் உற்பத்தி
செய்யப்பட்ட அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதைநெற்கள் யாவும் விவசாயத்திணைக்களத்தால் உற்பத்தி செய்யப்படும் பதிவுசெய்யப்பட்ட விதை நெல்லின் தரத்திற்கொப்பானவையாகக் காணப்படுகின்றன. இச்சம்பவங்கள் எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
அந்த வகையில் இவ்வமைப்பை பாராட்டாமலிருக்க முடியாது என தெரிவித்தார்.

அத்துடன் இந்நிகழ்வில் விவசாயத்திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், கமநல அபிவிருததி அதிகாரிகள,; நீர்ப்பாசனப் பொறியியலாளர், விவசாயப் பிரதிநிதிகள், விற்பனை
முகவர்கள், மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அந்தவகையில் இவ்வமைப்பு 2004ம் ஆண்டு 12 அங்கத்தவர்களுடன் விவசாயத்திணைக்களத்தின் தானியகக்ளஞசிய அபிவிருததிததிடடததில் ஓய்வு பெறற் உதவி விவசாயப் பணிபப்hளர் ஆ .பரீட் அவர்களின் அனுசரணையுடன் எக்றோ குறூப் என்ற பெயரில் இணைந்து கொண்டது. அன்று தொடடு; விவசாயத்திணைக்களததின் சகல விவசாய அபிவிருத்தித்திடடங்களிலும் பங்குகொண்டு, திறம்பட நடைமுறைப்படுத்தி நல்ல பலாபலன்களையும் அதிகாரிகளின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொணடு  வந்ததுள்ளது மேலும் இவா்களது .திட்டங்களாக:-
கூட்டெரு உற்பத்தியும் பாவனையும். மண்வள மேம்பாட்டுத்தல் திட்டங்கள், இரு போகங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் தானியப் பயிர்ச்செய்கை. ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவத்திட்டம். பாரம்பரிய நெல் உற்பத்தித்திட்டம். ஒருங்கிணைந்தகளை முகாமைத்துவ திட்டங்களாகும்..

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் இரண்டு போகமும் நெற்செய்கை; மேற்கொள்ளப்பட்டு ; வருகினறது. இதற்குப் போதுமான அளவு விதைநெல் கிடைககாமல் விவசாயிகள் பல காலம் அங்கலாய்த்துக் கொணடிருந்தனர். அப்போது ஓய்வு பெற்ற உதவி
விவசாயப்பணிப்பாளர் பரீட் அவர்களினதும் மற்றும் ஓய்வு பெற்ற நிருவாக உத்தியோகஸ்தர் இல்யாஸ் அவர்களினதும் சிந்தனைக்கமைவாக மேற்படி அமைப்பிற்கு மேலும் சிறந்த சில அங்கதத்வர்களையும் இணைததுக் கொண்டு மேற்படி திட்டத்தினைப் பெறறுக்கொண்டு  பல புதிய நவீன விவசாயத் திட்டங்களையும் அமுல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தனர்.

2014 யில் இத்திட்டம் நிறைவேற்றி இன்று 12வது போகத்திற்கான இந்நிகழ்வில் இவ்வமைப்பு கலந்து கொண்டிருப்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும். மேலும் இத்திட்டம் நிறைவேற உதவிபுரிந்த அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகள் அதேபோல் விவசாயப்பெருமக்கள் அனைவரையும் நினைவு கூறுவதோடு மற்றும் நன்றியும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றது.

இதனடிப்படையில் இதுவரைககும் சுமார் 50,000 புசல் அத்தாட்சிப்படுத்தப்படட் விதைநெல் உற்பத்தி செய்து  இஙகு; மடடுமல்ல வெளி மாவட்டங்களுக்கும்  விநியோகம் செய்யப்படுகின்றது. மேலும் சராசாரி ஒரு போகத்தில் 5000 புசல் விதை நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் விவசாயிகளின் விதைநெல் சுமார் 20,000 புசல் நெல் சுத்திகரிப்பு செய்து கொடுககபபடடுளளது என்பதயும்  இவ்வமைபபு  பெருமையுடனும் மகிழ்சசியுடனும் தெரிவிக்கிறது.
தரமான மற்றும் தூய விதைநெல் பாவனையால் கிடைக்கும் அனுகூலங்களையும் மற்றும் அத்தாட்ச்சிபப்டுத்தப்படும் விதை நெல்லுக்கான குணாதிசயங்களையும் நன்கு அறிந்த இவ்வமைப்பினர் விதைநெல் உற்பத்தியில் மிகவும் நேர்த்தியாகவும்  மற்றும்  மிகுந்த  அர்ப்பணிபபுடனும் செயற்பட்டுக்கொணடு வருகின்றனர். மேலும் இவ்வமைப்பினர் கூட்டெரு தயாரிப்பிலும், பாரம்பரிய நெல் உற்பத்திலயிலும் ஆரவம் காட்டியும் வருகினறனர்;

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவு விவசாயிகள் மத்தியில் இவ்வாறானதொரு விதை (நெல் மற்றும் தானிய வகை) சுத்திகரிபபு; நிலையம் ஒன்று இல்லை என்ற குறைபாட்டுக்கு இன்றய நிகழ்வு மூலம் எக்ரோ குறூப் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :