தனுஷ்க குணதிலக்கவுக்கு இன்றும் பிணை மறுப்பு



வுஸ்திரேலியாவில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க, இன்று கை விலங்குடன் சிட்னி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.தனுஷ்க்க குணதிலக்கவை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே அவர் பேசியதை, டவுனிங் சென்டர் கோர்ட்டில் திரையின் மூலம் காட்சிப் படுத்த பட்டது.

" ஒரு வெளிநாட்டுப் பிரஜை என்பதன் அடிப்படையில் தனுஷ்க்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் வழங்கிய முகவரியில் அவர் இருப்பதாக அவர்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது" என்று தனுஷ்க குணதிலக்கவுக்கு நெருக்கமான வட்டாரம்
தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் மறுத்துள்ளது. இதன் காரணமாக அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் , சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியின் கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் 31 வயதான தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.டேட்டிங் செயலியின் மூலம் அறிமுகமாமான பெண் ஒருவரை, பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் குணதிலக்க கைது செய்யப்பட்டதாக சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்திருந்தது.

அவுஸ்ட்ரேலியாவின் சிட்னி நகர பெடரல் நீதிமன்றம் நேற்று குணதிலக்கவுக்கு பிணை வழங்க மறுத்திருந்தது. இன்றைய தினம்(7) அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். எனினும் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது.

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் குணதிலக்க கைது செய்யப்பட்டதாக சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்திருந்தது..

பாலியல் குற்றச்சாட்டில் தனுஷ்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் கடந்த வருடம் தனுஷ்க்க குணதிலக்க ,குசால் மெண்டிஸ்,நிரோஷன் திக்வெல்ல ஆகிய 3 இலங்கை கிரிக்கட் வீரர்களை கொவிட் சுகாதார விதிமுறைகளை (breach of bio-secure covid bubble) மீறியதாக , இங்கிலாந்து நாட்டிலிருந்தும் திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்பதும் யாவரும் அறிந்த விடயமே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :