விபத்தில் சிக்கிய லொறியை திருத்தம் செய்ய கொண்டு சென்ற போது அந்த லொறி இன்று (17) மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி பிரதான வீதியில் வைத்து லொறி ஒன்று நேற்று (16) குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
அவ் விபத்தில் சிக்கிய லொறியை இன்று (17) கெரேஜ் ஒன்றுக்கு கொண்டு செல்லும் போது லொறி நாவலடி - பிரதான வீதி ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள வாய்க்கால் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத நிலையில், லொறிக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment