உலக சுற்றுலா தினம்அஷ்ரப் ஏ சமத்-
லக சுற்றுலா தினம் அக்டோபா் 1ஆம் திகதி பொத்துவில் அருகம்பையிலும் நடைபெற்றது.இந் நிகழ்வினை இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவா் ஏ.எம். ஜவ்பா் ஏற்பாட்டில் நடைபெறறது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுற்றுலத்துறை இராஜாங்க அமைச்சா் டயானா கமகே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா்.அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தா் ரமீஸ் அபுபக்கா், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபா் ஜே.எம்.ஏ டக்லஸ் மேலதிக அரசாங்க அதிபா் வீ.ஜெகதீசன், மற்றும் அருகம்பை சுற்றுலா விடுதி உரிமையாளா்கள், பொத்துவில் பிரதேச செயலாளா் மற்றும் பொலிஸ், இரானுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

இலங்கையில் ஒரு நாளைக்கு 2 இலட்சம் சுற்றுலாப்பிரயாணிகள் தங்கி நிற்கக் கூடிய அளவுக்கு சுற்றுலா ஹோட்டல்கள் அரைகள் உள்ளன. ஆனால் தற்பொழுது ஓர் நாளைக்கு 1000 பேர் மட்டுமே சுற்றுலா பிரயாணிகள் இலங்கை வருகின்றனா். எரிபொருள் விலை அதிகரிப்பு, உணவுப் பொருட்கள் விலை ஏற்றம், மற்றும் உள்ளுர் வெளிநாட்டு விமான சேவைப் போக்குவரத்து பிரயாணத்துக்குரிய செலவுகள் டொலா் அதிகரிப்பினால் மும்மடங்காக பெருகியுள்ளது. இவற்றினை அரசு கருத்திற் கொள்ளல் வேண்டும்.

இலங்கையில் கடந்த உயிா்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் 19, தொற்று நோய், மற்றும் பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கித் தவித்தது.. இக் கால கட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளினால் இத்துறை வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இலங்கையின் அன்னியச் செலவானியினை சம்பாதித்துத் தருவது சுற்றுலாத்துறையாகும். இத்துறையே கடந்த காலங்களி்ல் முதலிடம் வகித்தது. .இத்துறையில் மட்டுமே நமது நாட்டுக்குத் தேவையான டொலா்களையும் வெளிநாட்டுச் செலவானிகளைச் சம்பாதிக்க முடியும்.
இத்துறையை நம்பி நமது நாட்டில் இரண்டு மில்லியம் போர் நேரடியாகவும் மறைமுகமாகவும் நாளந்த வருமானத்தினைப் பெருபவா்கள் உள்ளனா்.. இத்துறை சாா்ந்த தொழிலாளா்கள் கடந்த இரண்டு வருடகாலமாக தமது வருமானத்திலும் ஜீவனோபாயத்திலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்..

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவா்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று அந் நாடுகளில் உள்ள சுற்றுலா பிரயாணிகளை மீள இலங்கைக்கு அழைப்பதிலும் சுற்றுலாததுறையை வளா்ப்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்கும் முயற்சி எடுத்து வருகின்றாா்.. அத்துடன் இத்துறையை கட்டியெழுப்புவதற்காக இளம் சுற்றுலாத்துறை அமைச்சா ஹரின் பெர்ணான்டோஇராஜாங்க அமைச்சா் டயானா கமகே ஆகியோா் தலைமையில் பல முயற்சிகளை எடுத்து வருவதை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். . ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந் நாடுகளில் உள்ள ஊடகங்களிலும் இலங்கையின் சுற்றுலாத்துறைப் பிரச்சாரங்களையும் சர்வதேச மட்டத்தில் வளா்த்து வருகின்றாா்.

இத்துறையை வளா்ப்பதற்கும் விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் முற்றுமுழுதாக பல்வேறுபட்ட அர்ப்பணிப்புக்களை செய்தல் வேண்டும். அத்துடன் கொழும்பு தலைநகாிலும், பொத்துவில் அருகம்பை , மற்றும் ஹபரணை போன்ற பிரதேசங்களிலும உலக சுற்றாடல் தினம் அப்பிரதேச ஹோட்டல் உரிமையாளா்கள் அமைச்சு அதிகாரிகள் அரசாங்க அதிபா்கள் இணைத்துக ்கொண்டு இத்தினத்தினையும் கொண்டாடி ஒர் விழிப்புணா்வை ஏற்படுத்தி உள்ளதாகவும் ஏ.எம். ஜவ்பா் தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :