நடமாடும் ஆயுள்வேத மருத்துவ முகாமும் போசனை விழிப்புணர்வும்



நூருல் ஹுதா உமர்-
க்கரைப்பற்று - அலிகம்பை பிரதேசத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸின் வழிகாட்டலில் பிராந்திய ஆயுள்வேதப்பிரிவினால் ஆயுள்வேத மருத்துவ முகாமும் பாடசாலை மாணவர்களுக்கு போசனை திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலும் வியாழக்கிழமை நடாத்தப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.பி.அப்துல் வாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய ஆயுள்வேதப் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ. நபீல், சுகாதார தகவல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எம். முஜீப், ஆயுள்வேத பொறுப்பு வைத்திய அதிகாரிகளான டாக்டர் அப்துல் ஹை, டாக்டர் ரஜீஸ்,டாக்டர் அமீலா உள்ளிட்ட பிரிவுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் பங்குபற்றிய மக்கள் மாதம் இரண்டு தடவை தமக்கு சிகிச்சை வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கமைவாக பணிப்பாளரின் வழிகாட்டலில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என பிரதி பணிப்பாளர் இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :