அரச அலுவலகர்களுக்கான தமிழ் மொழி வகுப்புகள் ஆரம்பம்.எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ரச கரும மொழிகள் திணைக்களத்தினால்அரச அலுவலகர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள மற்றும் தமிழ் மொழிக் கற்கைநெறிகள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 18/2020 சுற்று நிருபத்திற்கு அமைவாக தமிழ் பேசும் அரச அலுவலகர்களுக்கு சிங்களமொழி பாடநெறியும்இ சிங்கள மொழி பேசும் அரச அலுவலகர்களுக்கு தமிழ் மொழி பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்இ இவ்வாறான பாடநெறிகள் பொலன்னறுவை மாவட்டத்திற்கான பல அலுவலகங்களிலும் திணைக்களங்களிலும் நடைபெற்று வரும் நிலையில்இ பொலன்னறுவையில் காணப்படும் பல்வேறு அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்களுக்கான தமிழ் பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு ஒன்றினைந்த மொழி விருத்தி உத்தியோகத்தர் பி.ஏ.ரீ.சுஜீவனி பிடிகலவின் நெறிப்படுத்தலில் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தின் உதவிச் செயலாளர் டி.எஸ்.எஸ்.முத்துமாலி தலைமையில் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தின் கேற்போர்கூடத்தில் நடைபெற்றது.

நாட்டின் நிர்வாகத்துறையினைச் சிறப்பாக முன்னெடுக்கும் வகையிலும்இ சகல இன மக்களிடத்திலும் மொழி வழியிலான சமாதானம்இ ஐக்கியம்இ இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வகையிலும் அரச உத்தியோகத்தர்களை இரு மொழிப்பயன்பாட்டிற்கு தேர்ச்சி பெறச்செய்யும் நோக்கில் தமிழ் பேசும் அரச ஊழியர்களுக்கு சிங்களமொழி பாடநெறியும்இ சிங்களமொழி பேசும் அரச ஊழியர்களுக்கு தமிழ்மொழி பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இப்பயிற்சிநெறிக்கு வளவாளராக அரச கரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியரான எம்.எம். செய்னுதீன் கலந்து கொண்டு பாடநெறிகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :