வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை ,பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மஹா மகோற்சவப் பெருவிழா இன்று (20) செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிறது.
இன்றுசெவ்வாய்க்கிழமை மாலை திருக்கதவு திறத்தலும்,கடலுக்குச் சென்று ஆராதனை செய்து ஊர் ஆராவாரம் பண்ணி ஊர்வலம் வருதலுடன், ஆராதனையுடன் கொடியேற்றலும் இடம்பெறும்.
எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை இரவு சுவாமி எழுந்தருளப்பண்ணல் இடம் பெறும். மறுநாள் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை நாட்கள் வெட்டுதல்.
அதேவேளை, அக்டோபர் 01ஆம் திகதி சனிக்கிழமை மாலை கல்யாணக்கால் வெட்டுதலும்,ஊர்வலமும் இடம் பெறும்.
05ஆம் திகதி புதன்கிழமை வாள் மாற்றுதலும்,பரந்தாமன் பஞ்சபாண்டவர் ஸ்ரீ திரௌபதா தேவி சகிதம் வனவாசம் செல்லுதலும்,அதைத்தொடர்ந்து அஞ்ஞாத வாசம் செய்தலும் இடம் பெறும்.
06 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு அருச்சுனர் பாசுபதம் பெறத்தவம் செய்தலும்,அரவானைக் களப்பலியிடலும் இடம் பெறும்.
07ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை வீரகும்பம் நிறுத்தலும்,தீ மூட்டுதலும்.பிற்பகல் கடல் குளித்தலும்,மஞ்சள் குளித்தலும், அதனைத் தொடர்ந்து தீ மிதித்தல் வைபவம் நடைபெறும்.
மறுநாள் 8 ஆம் திகதி சனிக்கிழமை பகல் பாற்பள்ளயமும்,தருமர் முடிசூட்டு வைபவமும்,வாழிபாடுதலும்.இரவு அம்மனின் ஊர்வலத்துடன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை வந்தடைதலும் இடம் பெறும் என்று ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment