இலங்கைத் தொழிலாளர்களுக்கு சவுதி அரேபியாவில் கூடுதலான தொழில்வாய்ப்பு -சவுதி அரேபியத் தூதுவர்யிற்சிபெற்ற இலங்கை தொழிலாளர்களுக்கு சவுதி அரேபியாவில் அதிகளவான தொழில்வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் Khalid bin Hamoud Nasser Aldasam Alkahtani தெரிவித்துள்ளார்.

பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தமது நாட்டுக்கு உதவுமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தூதுவரிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் ஹாலிட் பின் நஸீர் சமீபத்தில் தனது நற்சான்றிதழ்களை கையளித்தப்பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை சந்த்தித்தார்.

இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போதே தூதுவர் இந்த விடயத்தைக் கூறினார்.பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கு சவுதி அரேபியாவில் கூடுதலான தொழில்வாய்ப்புக்களை பெற்றுகொடுப்பதே தமது நோக்கம் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 4 இலட்சம் தொழிலாளர்களுக்கு சவுதியில் வேலைவாய்ப்பு வழங்குவது இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :