1999 செப்டெம்பர் 18ம் திகதி அம்பாறை மாவட்டத்தின் கோனகல சிங்கள கிராமத்தில் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 23 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கோனகலயில் நேற்று (18.09.2022) மாலை இடம் பெற்றது.
1999 செப்டெம்பர் 18ம் திகதி அம்பாரை மாவட்டத்தின் கோனகல சிங்கள கிராமத்தில் எல்.ரீ.ரீ.ஈ.யினரின் தாக்குதலில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 54 பேர் படுகொலை செய்யப்பட்டமை ;குறிப்பிடத்தக்கது.
படுகொலையின் 23வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (18.09.2022) மாலை 06.00 மணியளவில் இறந்தவர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் உறவினர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றதுடன் உறவினர்களால் தீபம் ஏற்றி இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிராத்தனையிலும் ஈடுபட்டனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட உயிரிழந்தவர்களின் உறவினர்கள் 'நீதி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்' என்றும் பதாதைகளை வைத்திருந்தனர்.
0 comments :
Post a Comment